பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
88

கேட்டதும் அழகப்பனும், கந்தசாமியும் பிரமித்துப்போய் விட்டனர்.

நான் முக்கியமாக எதைச் சொல்ல விரும்புகிறேன் என்றால் இந்த உலகம் முழுவதும் ஒலி அலைகள் வியாபித்திருக்கின்றன.

நாம் இப்போது அமர்ந்திருக்கும் இந்த மண்ட பத்திலும்கூட, கோடிக்கணக்கான ஒலி அலைகள் கண்ணுக்குத் தெரியாமல், சிலந்தி வலைபோல் பின்னிக் கிடக்கின்றன. ஒவ்வொரு ஒலி அலையும்: மற்றொரு ஒலி அலையிலிருந்து மாறுபட்டவை.

இந்த மாறுபட்ட பலதரப்பட்ட ஒலி அலை களையும், ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு இலவசப் பயணமாக அழைத்துச் செல்லும் பணியை காற்று ஒரு கடமையாகச் செய்து வருகிறது.

உலகின் மீது படர்ந்துள்ள காற்று மண்டலத் தின் உதவி இல்லையானால் நான் இவ்வளவு அருகிலிருந்து பேசுவது கூட உங்கள் செவிகளில் விழாது. நான் வாயசைப்பதைத்தான் உங்களால் பார்க்க முடியும். பேசுவதை-ஒலியாக மாற்றி, அவற்றை அலைகளாகச் சுமந்து சென்று கேட்கும் திறன் படைத்த உங்கள் செவிப் புலனுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது காற்றே.