பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் - 190s செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் மூவர்தான் அந்த அறையில் இருந்தார்கள். சர்வாதிகாரி - ராணி - அந்தம்மாள். அந்தக் கொடிய அம்மாள் - அந்த அம்மாளைத்தான் சர்வாதிகாரி திஸ்ப் - திஸ்ப் என்று அழைக்கிறார். அவர்கள் மூவரே இரண்டுமணி நேரம் வரையில் அந்த அறையில் இருந்தனர். பாவம், ராணி அழுதார்கள். புலம்பினார் கள். மண்டியிட்டுக்கூடக் கெஞ்சினார்கள். ராணியின் வேண்டுகோள் மறுக்கப்பட்டது. தீஸ்பே நஞ்சை எடுத்துவரச் சென்றவர்கள்; எடுத்து வந்தார்கள்; கொடுத்தார்கள். குடிக்கும்படிக் கட்டாயப்படுத்தி னார்கள் - அந்தக் கொடிய அம்மாளே ராணியின் இறந்த உடலை எடுத்துப் போனார்கள், போதுமா (கைக்குட்டையை எடுத்துக்காட்டி). இந்தக் கைச் குட்டை கத்தேரினா அறையில் கிடந்தது. இது யாருடையது? உன்னுடையது. - o சிலுவையைக் காட்டி இதோ நீ வைத்திருக்கிறாயே இந்தச் சிலுவை இது யாருடையது? அவனுடையது. இன்னும் வேறென்ன விளக்கம் வேண்டும்? அழு, கெஞ்சு, கூத்தாடு, மன்னிப்புக் கேள். சற்றுமுன்பு உன்முன் அவள் என்ன என்ன செய்தாளோ அவையெல்லாம் நீ செய்தாலுங் கூடஉன் உயிர் தப்பாது. பழிக்குப்பழிதான். தீப்ஸ் : ரொதோல்போ....... - ரொதோல் : நீ குற்றவாளியல்ல. என்பதை இனி மறுக்க முடியுமா? துணிவு உண்டா உனக்கு? சொல் பார்ப்போம். . . . . . . . . . திஸ்ப் : இல்லை ரொதோல்போ! உன்னிடம் தப்ன் சொன்னதெல்லாம் உண்மைதான். அந்த முடிவுக்குத் தான் நீயும் வந்து விட்டாய். நான் சாகிறேன் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. உன் காலடியில் உன்