பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 43 ரொதோல் : பயம்! எனக்காகவா - இல்லை, அவளுக்காக-போகட்டும் நீ யார்? ஒமோதேய் ! நீ கட்டாயப்படுத்துவதனால்-கேள் சொல் கிறேன். ஒரு வாரத்திற்கு முன்பு நள்ளிரவில் நீ தனி யாகப் போய்க்கொண்டிருந்தாய்.மாதாக் கோவிலுக்கு பின்புறம் வாட் போர் சத்தமும் கூச்சலும் கேட்டு ஒடிவந்தாய். ரொதோல் : ஆம் மூன்று கயவர்கள் ஒரு முகமூடியணிந்த மனிதனைக் கொல்லப் போனார்கள். நான் தடுத்துக் காப்பாற்றினேன். ஒமோதேய் : அந்த முகமூடி நான்தான்-என் உயிரைக் காத்த உனக்கு ஒரு நன்றி மொழிகூடக் கூறாது நான் யார் என் பெயரென்னவென்று கூடக் கூறாது போனவன் நான்தான். அன்றிரவிலிருந்து உனக்கு நன்மைசெய்யவேண்டுமென்று நினைத்தேன். என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களை எனக்குத் தெரியும். உங்கள் காதலியை நீங்கள் சந்திக்கவேண்டும் என்பதற்காவன செய்தேன். நன்றியறிதலாக . வேறொன்று மில்லை. இப்பொழுதாவது என்னை நம்புகிறீர்களா? ரொதோல் : ஆம்! ஆம்! நன்றி-அவளை யாரோ பழிவாங்க இப்படிச் செய்வதாய்நினைத்தேன். எனக்கு ஒரு பெருஞ்சுமையாக இது இருந்தது. நீ, அதை நீக்கினாய். உனக்கு நன்றி. நீ இனி என் தோழன். நான் உனக்குச் செய்ததைவிட எத்தனை மடங்கு மேலானதைச் செய்துவிட்டாய். ந ம ன் கத்தேரினாவைப் பார்க்கவில்லையென்றால் நீண்ட நாள் என்னால் உயிர்வாழமுடியாது. தற்கொலை கூடச் செய்துகொள்வேன். அவ்வளவு பைத்தியம் வெறி தலைக்கேறி இருக்கிறது. நான் உன் உயிரை மீட்டேன். நீயோ என் உயிர் இதயம் இரண்டையும் மீட்டாய்.