பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
  1. 15. கொன்றைக் காயின் உள்ளே உள்ள விதைகளை ஒரு பக்கம் துளையிட்டு எடுத்துவிட்டு ஊதும் குழலாகப் பயன்படுத்தினர்.
  2. 16. கோங்கு தனிப்பூவாகத் தொடர்ந்து பூத்திருக்கும் காட்சி கார்த்திகைத் திங்களில் ஏற்றப்படும் விளக்கு வரிசை போலத் தோன்றும். காட்டு வழியிற் காற்றடிக்கும்போது இதன் மலர் காம்பிலிருந்து சுழன்று சிதறி வீழ்வது ஒருவன் கையில் வைத்திருந்த நெருப்புச் சுடரை விட்டெறிவது போன்று தோன்றும்.
  3. 17. சங்க இலக்கியம் கூறும் இலவம் இன்றுள்ள இலவமன்று. அவ்விலவம் அடிமரம் பருத்து நீண்டது; முட்களைக் கொண்டது; இம்முள் கூர்மையுடையதன்று. அடிமரத்தில் முட்டு முட்டு அமைப்பாகக் கூம்பு வடிவத்தில் அமைந்திருக்கும். களிறு தன் தினவை குறைத்துக் கொள்ள இலவின் அடிமரத்தில் உராய்ந்து தேய்த்துக் கொள்ளும்.
  4. 18. குரவம் காயை விளையாட்டு மகளிர் பொம்மையாகக் கொண்டு தொட்டிலிலிட்டுத் தாலாட்டி மகிழ்வர். இதன் காய்கள் சாம்பல் நிறத்தில் கிளைகளில் ஆங்காங்கு தொங்கி அசைவது சிறு குழந்தைப் பொம்மை தொங்கி ஆடுவது போன்றிருக்கும். இதனாலேயே இது 'குரவம் பாவை’ எனப் பெயர் பெற்றது.
  5. 19. புன்னை கடற்கரையில் வளர்வது. கிழக்கிலிருந்து வீசும் கடற்காற்றால் நாள்தோறும் தாக்கப்படுவதால் இதன் கிளைகள் மேற்கு நோக்கி வளைந்து வளரும்.
  6. 20. புன்னை மரம் கருநிறம், இலை கரும் பச்சை; அரும்பும் மலரும் வெண்மை; தாது பொன்னிறம், ஆதலின் இம் மரம் 'நானிறக் கடிகை' ஆகிறது.
  7. 21. புன்னை முகை இயற்கையாக மலர்வதுடன் கடல் அலையின் நீர்த்துளி காற்றால் சிதறி நனைந்தும் மலரும். புன்னை மலர் மணம் பக்கமெலாம் பரவிக் கமழும். கடற்கரையில் பரதவர் காயவைத்த மீன் புலாலின் கெடு நாற்றத்தை இஃது அகற்றும்.
  8. 22. புன்னைக் காய்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்டது.