பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 74

"நாற்றம் உரைக்கும் மலர் உண்மை"52-என நான்மணிக் கடிகை சான்று கூறுகின்றது. உயிர் இல்லாத உடல் மகிழ்ச் சியையோ இன்பத்தையோ தராது. மணம் இல்லாத நானும் துன்பம் என்பதை,

"நறிய மலர் பெரிதும் நாறாமை இன்னா" 53 -என இன்னா நாற்பது சுட்டிக் காட்டுகின்றது. இந்நூலே,

"நாற்றம் இல்லாத மலரின் அழகு இன்னா"54- என்று என்னதான் நான் அழகோடு இருந்தாலும் "மணம் இன்றேல் இன்னா தரும் பிணம்" என்கின்றது.

மணம் இல்லாத என்னால் பயனே இல்லை என்பதைத் திருவள்ளுவர் “இணர் ஊழ்த்து நாறா மலர் அனையர்"55 என உரைவன்மை அற்றவர்க்கு உவமை காட்டுவதன் வாயிலாக விளக்கினார்.

எனது அழகோடு வண்ணத்தையும் சேர்த்துப் பார்த்த துறவி புத்தர் மோந்து பார்த்தார். மணம் இல்லை போலக் கண்டார். - "அழகும் நல்ல வண்ணமும் கொண்ட மலர் மணமற்று இருப்பின் பயன்படாது, இதுபோன்று சொன்னவண்ணம் நடவாதவனுடைய பேச்சும் பயன்படுவதில்லை"56 -என்று பேசினார். "மணம் இன்றேல் நான் உயிரில்லாத உடல் போலப் பயனிலேன்"

"உடலும் உயிரும் போல" 

என வாழ்த்தும் தொடர்பிலேயே "பூவும் மணமும் போல்” என்பதையும் கேட்டிருப்பீர்கள். இத்தொடர்பிலும் நான் உடலாகவும் மணம் உயிராகவும் அமைந்துள்ளோம்.

அருக தேவன் திருவடிகளில் எனது இனத்துத் தமக்கையாம் தாமரை படைக்கப்பட்டாள். அவள் தனது காணிக்கையாக மணத்தை வெளியிட்டாள். அதனை,

52-நான்.க:48,55-குறள்:650 53-இன்.நா 37;56-தம்.ப:55, 54-இன்.நா37:7,