பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

${ விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ திஸ்ப் : சாவியா நான் அப்பொழுதே ஐயப்பட்டேன். இதனாலேயா திறக்கமுடியும்ஆன்ழெல் : ஆம் என் கண்ணே. தீஸ்ப் : அது சாவியாக இருப்பதால் அது எனக்கு வேண்டாம். - - * - ஆன்ழெல் : சற்றுமுன்பு ஆசைப்பட்டாயே!. திஸ்ப் : ஏதோ நகையென்று நினைத்தேன். ஆன்றெல்: எடுத்துக்கொள் (தங்கச் சங்கிலியிலிருந்து அந்தச் சாவியைக் கழற்றுகிறான்). திஸ்ப் : வேண்டாம். வேண்டாம் அது சாவியென்று தெரிந்திருந்தால் நான் அதைப்பற்றியே கேட்டிருக்க மாட்டேன். அது எனக்குவேண்டாம். உங்களுக்குத் தேவையாக இருக்கும். ஆன்ழெல் : எப்பொழுதோ தேவை. அடிக்கடி அல்ல. என்னிடத்தில் இதேசாவி வேறொன்று இருக்கிறது நீ எடுத்துக்கொள். திஸ்ப் : வேண்டாம் எனக்கு எதற்குச் சாவி. மிகச் சிறியதாயிருக்கிறதே - இதைக்கொண்டா கதவு களைத்திறக்க இயலும். . ஆன்ழெல் : இந்தச் சாவி இரகசியப் பூட்டுகளுக்காகச் செய்யப்பட்டது. ஒரு படுக்கை அறையைக்கூட திறக்க லாம். பரவாயில்லை. நீ இதை எடுத்துக்கொள். திஸ்ப் : நீங்கள் கட்டாயப்படுத்துவதால் எடுத்துக்கொள் கிறேன். பெண்களுக்கேற்ற நகையாகத்தான் இது இருக்கிறது. (சாவி வாங்கிக்கொள்கிறாள்). ஆன்ழெல் : நற்காலம் எனக் கு! ஏதோ ஒன்று என்னிடத்திலிருந்து பெற்றுக் கொண்டாயே அதுவே போதும். மகிழ்ச்சி. - . . . . . .