பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125

. . . . . . .பழங்கதைகளும் பழமொழிகளும்

திரிபுரி தமிழ் விளக்கம்
1. வட்டாய் கராய் ப்ரேங் காகா

மழை இல்லை; இடி உண்டு;

மழை இல்லாதபோது இடி இடிக்கும். பயனில்லாத படாடோபப் பேச்சுக்கு இது ஓர் உவமை. ஒரே உவமைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2. காக் கடார் சனாய் லங் கானி ராஜா

பெரிய வார்த்தைகள் பேசுபவன் இலங்கை ராஜா

குரைக்கிற நாய்கடிக்காது. The dog that barks does not bite பெரிய பேச்சு பேசுகிறவன் ஒரு காரியமும் செய்ய மாட்டான் என்பது பொருள்.
3. அதி தக்க பான்மிலிகியா

அதிக எண்ணெய் பளபளப்பு தராது

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம் வாழ்க்கையில் எதிலும் மிதமிஞ்சி ஈடுபடக்கூடாது எனும் அறிவுரை இவற்றில் அடங்கியிருக்கிறது.
4. அதி குலுங்கனி ததல் பராக்

அதிக சலாம் போடுகிறவன் பொய்யன்

- -
5. சொடராக் குபாங் பகாலி சாகியா

அதிக ஆட்கள் குறைந்த மரச் சட்டங்கள் செய்தார்கள்

கண்ணுகளாச் சேர்ந்து களம் பறிச்சாற்போல ஊர் கூடி செக்குத் தள்ளினாற் போல அதிக ஆட்கள் வேலைசெய்து அறுவடையைக் கெடுத்ததுபோல் அல்லது ஊர் கூடி செக்கிழுத்ததைப் போல் Too many cooks spoil the broth.
6. புரைராக் குலங்னலியா முனியா

பல பெண்கள் சணல் கொதிக்கவைத்து சில மரச்சட்டங்கள் செய்தாற்போல

௸ பழமொழி