பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

ஜைன மதம்

கி. மு. ஐந்தாம் நூற்றண்டில் இந்தியாவில் நிலவிய பெரு மதங்களில் ஒன்றாகிய ஜைன மதம் விருஷபநாதர் அல்லது ஆதிநாதர் என்பவரால் உருவாக்கப்பட்டு, வர்த்தமானரால் வளர்க்கப்பட்டது.

இந்திய துணைக்கண்டம் பல ராஜ்யங்களாகப் பிரிந்து பல சிற்றரசர்கள் பேரசர்களால் ஆளப்பட்டு வந்தது. அவற்றில் மகத ராஜ்ஜியம் ஒன்று. அதில் வைசாலி என்ற பகுதியில் வாழ்ந்த கூடித்திரியர் தலைவன் சித்தார்த்தன் என்பவனுக்கும். திரிசாலை என்பவளுக்கும் கி. மு. 599ல் பிறந்தவர் வர்த்தமானர். அவர் பிறந்த சமயம் நாட்டில் நல்ல மழை பெய்து, பயிர் பச்சைகள் செழித்து, விவசாயம், வியாபாரம் பெருகியதால் விருத்தி அல்லது சுயிட்சத்தைக் கொண்டு வந்தவன் என்ற காரணத்தைக் கொண்டு வர்த்தமானன் என்று அவருக்குப் பெயரிட்டார்கள்.

நல்ல உடற்கட்டு, வீரம், தைரியம், கம்பீரம் ஆகிய லட்சணங்களுடன் வளர்ந்த வர்த்தமானன், 13வது வயதில் யசோதா என்ற பெண்ணை மணந்து பல ஆண்டுகள் இல்லறம் நடத்திய பின், பிரியதரிசினி என்ற பெண்ணுக்குத் தந்தை யானர். அப் பெண்ணின் கணவன் பிற்காலத்தில் இவருடைய மதபோதனைகளைத் தொடர்ந்து செய்ததாகக் கூறப்படுகிறது. இளமை முதல் உள்ளத்தில் உறுத்திக்கொண்டிருந்த ஆத்மீக உணர்வு பெருகி, உலக பந்தங்களிலிருந்து விடுதலே பெற வழிதேடி இல்லறத்தைத் துறந்து வெளியேறினர்.