பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதங்கள்

17

துன்பம், கடுந்தவம் நிறைந்த கத்தியின் குறுகிய கூர் முனையில் நடப்பதாகவே கருதவேண்டும்.

எண்ண முடியாத அளவில் ஜீவராசிகள் உலகில் வாழ்கின்றன. அவை இரண்டாகும். 1. விடுதலை பெற்ற ஜீவன்கள் 2. விடுதலை பெறாமல் மீண்டும் மீண்டும் கர்ம வினைகளினால் ஜனித்துக்கொண்டிருக்கும் ஜீவன்கள். கர்மவினைப் பயனோடு உள்ள ஜீவன்கள். ஜடம், ஜங்கமம், என்பன. ஜடப்பொருள்கள் ஸ்பரிச உணர்ச்சிக்காவன. நிலம், நீர், நெருப்பு, காற்று, தாவரங்கள் யாவும் ஆகும். ஓரறிவு முதல் ஐயறிவு வரை உள்ள உயிர்ப் பொருள்கள் அசைவனவற்றில் வரும்.

ஞான நிலையின் படிகள்: 1. மதி ஞானம்-ஐம்புலன்களைக் கொண்டு ஆராய்ந்து அறிதல் 2. சுருதி ஞானம்-கல்வி கேள்விகளால் தெளிவது 3. அவதி ஞானம்-குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை அனுபவித்த நிலையில் அறிவு பெறுவது. 4. மனபர்யாய ஞானம் -அறிவு பெறத் தடையாக உள்ளன என்று மற்றவர்கள் கண்டதை உணர்தல். 5. கேவல ஞானம்-தூய்மையும் மேன்மையுமான நிர்வாண நிலைக்கு வழிகாட்டும் மெய்ஞானம்.

உண்மையான தத்துவத்தின் அடிப்படையாக ஒன்பது நிலைகளைச் சொல்கிறார்கள். 1. ஆன்மா 2. ஆன்மா அற்றவை 3. தன்மை 4. தன்மையற்றவை 5. தன்மைக்கான காரணம் 6. புறப்பொருள் உட்புகாமை 7. கர்மாக்களால் சுட்டுண்டல் 8. கர்மாவை அழித்தல் 9. சகல கர்மாவிலிருந்தும் ஆன்ம விடுதலை எய்துதல்.

ஆன்மா: பலதரப்பட்ட காரியங்களைச் செய்கிறது. அக் காரியங்களின் பலனை அடைகிறது. மாறிமாறி சுழன்று வருகிறது.

ஜீவனின் சாரம் சித்தத்தில் இருவகையாகப் பரிணமிப்பது. தரிசனம், புத்தி என்பவை அவை. ஆன்மா அற்றவை ரூபமுள்ளது, அரூபமானது ஆகும். அரூபமானவை நான்காகப் பிரிகிறது. புண்ணியம் என்பது நல்ல காரியங்களினால் உண்