பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதங்கள்

19

கிறார்கள். அவை: 1. ஓரறிவுக்கு மேற்பட்ட எந்த ஜீவனையும் அழிக்கக் கூடாது, அரசர்களைப் பொறுத்தமட்டில் மக்களைக் காக்கப் போர் செய்யலாம். 2. பொய் சொல்லக்கூடாது. 3. பிறர் பொருளை விரும்பக்கூடாது 4. விவாக காலத்தில் கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாது 5. வீடு நிலபுலன், பொன் பொருள்களை நம் அந்தஸ்துக்கு மேல் வைத்துக் கொள்ளக் கூடாது. 6. புலால், போதைப் பொருள்களை உண்ணக்கூடாது 7. பயனுள்ள ஆராய்ச்சியிலும் தியானத்திலும் மனதைச் செலுத்தவேண்டும், தேவையான இடங்களுக்குப் பிரயாணம் செய்யலாம். 8. பிறருக்குத் தீங்கு நினைக்கக் கூடாது 9. தீய சொல், திய எண்ணம் கூடாது 10. விஷம், போதைப் பொருள்கனை பிறர் கைக்குக் கிடைக்கும்படி வைக்கக் கூடாது 11. சிரமணர்களுக்கு உணவும், நீரும், புத்தகமும் கொடுத்து உதவவேண்டும். 12. பிற எல்லா வழிகளிலும் துணையாக இருக்கவேண்டும்.

வெளிவேஷங்களை வெறுத்த வர்த்தமானவர் கூறுகிறார்: தலையை மொட்டையாக்குவதால் சிரவணனாகிவிட முடியாது. பூணூல் போட்டவன் எல்லாம் பிராமணன் அல்லன், பேசாமல் இருந்தால் முனிவனாகிவிடமாட்டான். மரவுரி தரிப்பதால் தவசியாகிவிட முடியாது. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தினால்தான் சிரவணன் ஆவான். அகிம்சை, கல்வி, பிரம்மச்சரியம் இவைகளைக் கடைப்பிடிப்பதால் பிராமணன் ஆகிறான். ஞானம், கருணை இவற்றால் முனிவனாகிறான். பற்றை ஒழிப்பவன் தவசியாகிறான். ஆகவே ஜாதி பிறப்பினால் வருவதல்ல; செய்கைதான் காரணம்.

இயற்கை வாழ்வு வாழ்ந்த மகாவீரர், இயற்கை பொருள்களிலிருந்து தாம் அறிந்துகொண்டதாகக் கூறும் தத்துவங்கள் உணர்ந்து இன்புறத்தக்கவையாக உள்ளன.

“பூமியினிடமிருந்து பொறுமையும், மன்னிக்கும் இயல்பையும் தெரிந்துகொண்டேன். காற்றிலிருந்து எல்லாப் பொருள்களோடும் அவைகளின் தன்மைக்கேற்றபடி கலந்து பழகக் கற்றுக்கொண்டேன். நெருப்பிலிருந்து பாவத்தையும், தீய