பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

புரட்சி செய்த


எலிசபெத்தின் ஆட்சிக்காலம் முழுவதும் பேகனுடைய முன்னேற்றம் தடைப்பட்டுக் கொண்டேயிருந்தது. அவள் இறந்தபிறகு, ஜேம்ஸ் மன்னனுடைய காலம் தொடங்கிய பிறகுதான் பேகன் படிப்படியாக உயர்ந்தார். 1606 ஆண்டு சொலிஸிடர் ஜெனரல் (Solicitor-General) பதவி, 1918ல் அட்டார்னி ஜெனரல் (Attorney-General) பதவி, 1518ல் தனது ஐம்பத்தி ஏழாவது வயதிலே இங்கிலாந்து அரசிலே மிகப் பெரிய பதவிகளுள் ஒன்றான சான்ஸ்லர் (Chancellor) பதவி, 1917ல் முத்திராதிகாரப் மதவி (Lord keeper of the Great Seal) இப்படி படிப்படியாக உயர்ந்தார். அப்போதும் அவர் தத்துவ ஆராய்ச்சி வேலையை மறக்கவில்லை. 1605ல் கல்வியறிவின் முன்னேற்றத்தைப் பற்றிய அவருடைய சிறந்த நூலான டி ஆக்மெண்டிஸ் (D’ Agmentis) என்ற நூல் வெளியிடப்பட்டது. 1621ல் நோவல் ஆர்க்கேனம் (Novem Arganum) வெளிவந்தது.

எஸ்ஸெக்ஸ் பிரபுவின் மறைவுக்குப் பிறகு எஸ்ஸெக்ஸின் ஆதரவாளர்கள் பலம் வாய்ந்த பகைவர்களாயினர். எலிசபெத்தின் காலம் வரை தங்கள் சினத்தை வெளிக்காட்டாமல் இருந்தவர்கள், இப்போது வெளிப்படையாகவே கிளம்பிவிட்டனர். இதையறிந்த பேகன் தனக்கு ஒரு படை வேண்டுமென்று கருதி, தனக்கிருந்த பதவியின் செல்வாக்கால் பலருக்குப் பல உதவிகள் செய்து தன் பக்கம் வைத்துக்கொண்டார். ஆனால் அந்த கும்பலில் எஸ்ஸெக்ஸ் பிரபுவின் ஆதரவாளர்களும் இருந்தார்கள். இது பேகனுக்குத் தெரியாது. ஜேம்ஸ் மன்னன் காலத்தில் இந்தச் சதி அதிகமாக வளர்ந்தது. ரோஜர் அஸ்சாம் (Rojer Assam) என்பவர் அரசாங்கத்தில் இருக்க வேண்டியவர்களுக்கு என்னென்ன தகுதிகள் தேவை என்பதை நான்கு அடிகள் கொண்ட கவிதை ஒன்றில் விளக்குகிறார்.

Cog lie, flatter and face,
Four ways in Court to win men grace.
If thou be thrall to none of these.
Away, good Piers! Home John Cheese!