பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள்

129


லண்டனில் சீனப் பிரதிநிதியாக இருந்தவனும் ஒரு வெள்ளைக்காரன்தான். இவனை என்ன செய்யலாம் என்று மஞ்சு சர்க்காரைக் கேட்டிருந்தான். “இவன் ஒரு பைத்தியக்காரன் என்று சொல்லி தனியாக ஒரு கப்பலை வாடகைக்கு அமர்த்தி அனுப்பிவிடுங்கள்” என்று மஞ்சு அரசாங்கத்திடமிருந்து பதில் கிடைத்தது ஒரு பக்கம் இவனைக் கப்பலிலேற்ற முயற்சி. மறுபக்கம் இவனை விடுவிக்க காண்ட்லியின் முயற்சி, இந்த நிலையில் காண்ட்லி பல வழக்கறிஞர்களை, நீதிபதிகளை சந்தித்து வாதித்தார். பிரிட்டிஷ் பிரதிநிதியையும் சந்தித்தார். கடைசியில் சீனப் பிரதிநிதியைச் சந்தித்து சன்னைக் கடத்திக் கொண்டு போனால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை செய்துவிட்டு போர் போன ஏடான London Times அலுவலகம் சென்று செய்திகளை விபரமாகக் கூறி வெளியிடும்படி ஏற்பாடு செய்துவிட்டு வந்து, “தைரியமாயிரு; கவலைப் படாதே; முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்” என்று ஒரு சீட்டெழுதி சிறையிலுள்ள சன்னுக்கு அனுப்பிவிட்டான்.

ஆங்கில பத்திரிக்கைகள் சன்னப் பற்றி எழுதத் தொடங்கின. குறிப்பாக லண்டன் டைம்ஸ், இவனைச் சிறையில் வைத்தது சட்ட விரோதமென்றும், விடுதலை செய்வதுதான் நீதியென்றும் எழுதியது. இதன் பிறகு, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் சீனாவுக்கும் அப்போது லண்டனுக்குத் தப்பி ஓடி வருபவர்களை ஒப்படைக்கவேண்டுமென்ற ஒப்பந்தம் ஒன்றுமில்லை. ஆகவே, சன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான். பல செய்தித்தாட்களில் இவன் பெயர் வெளிவந்த காரணத்தால் இவனைப்பற்றித் தெரிந்துகொள்ளவும், நோக்கம் சரியானதாயிருந்தால் இவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யவும் சீர்திருத்த நோக்கங்கொண்ட பல சீனர்கள் உதவிசெய்ய முன் வந்தனர். இவன் காலத்தில் மஞ்சு அரசுபீடத்திலிருந்திருந்தவன் வாங்ஷீ. இவன் ஆறு வயது சிறுவனாயிருந்தபடியால் இவனை ஒப்புக்கு அரியாசனத்தில் அமர்த்தி, 18 வயது ஆகின்ற வரையில் த்ஸுஹஸி என்ற அடங்காப்பிடாரி ரீஜண்டாக இருந்து ஆண்டு வந்தாள். ‘சீர்திருத்தம்’ என்று காதில் விழுந்