பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174 உலகைத் திருத்திய

போர்கள் வேறு நடத்த வேண்டிவந்தது. இந்த நெருக்கடியில் சிலர் அபிசீனியாவுக்கு ஓடி தஞ்சம் புகுந்தனர். அவர்களே அபிசீனிய அரசாங்கம் அன்போடு வரவேற்று உபசரித்தது. இரண்டாவது கட்டமும் அபிசினியா மன்னன் நெரு என்பவரிடம் தஞ்சம் புகுந்தது. இப்படிப் பயந்தவர்கள் நாலா பக்கங்களுக்கும் ஓடினர். ஆனால் இவ்வளவுக்கும் அசையாது நபிகள் மெக்காவிலேயே இருந்தார்கள், அபுதாலிப் என்பவரைக் கண்டு ‘முகம்மதுவுக்கு நீ பாதுகாப்பு கொடுத்தால் கொன்றுவிடுவோம்’ என்று பயமுறுத்தினர் என்றாலும் ‘நீங்கள் எவ்வளவுதான் பயமுறுத்தினாலும் நான் அவருக்குப் பாதுகாப்புத் தருவதை நிறுத்த மாட்டேன்’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். பிறகு, ‘முகம்மதுவே’, நீர் இந்தக் கொள்கையை விட்டுவிட்டால் உம்மை அரசனாக்குகிறோம் என்று சொன்னதற்கு ‘ஒரு கையில் சந்திரனையும், மற்றாெரு கையில் சூரியனைத் தருவதாயினும் என் கொள்கையை விடமாட்டேன்’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் நபிகள். இதனால் மேலும் ஆத்திரமடைந்த குரைஷிகள் முகம்மத்தையும் அவர் குடும்பத்தையும் குலத்திலிருந்து விலக்கி வைக்கிறோம் என்றறிவித்தார்கள். அதற்கும் அஞ்சவில்லை அவர். 619ல் நீக்கப்பட்டனர். மெக்காவிலிருந்து அறுபடி கல் தொலைவிலுள்ள டாயிப் நகரத்தில் கொள்கை சொல்ல நபிகள் புறப்பட்ட முதல் நகரமாகும். அந்நகர மக்கள் உருவ வழிபாட்டில் அசையா நம்பிக்கைக் கொண்டவர்களாகையால் நபிகளைக் கல்லாலும், கட்டையாலும் அடித்து, கால்கள் இரண்டிலும் இரத்தம் கசிய கசிய துரத்தப்பட்டார். இவர் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள மனமிருந்தும், குரைஷிகளுக்குப் பயந்து சிலர் அபிசீனியாவுக்கு ஓடிவிட்டதால் இவரைக் காப்பாற்றம் போதுமான பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது.

       இதையெல்லாம் கேள்வியுற்றசில மெதினா மக்கள், 6.1ல் அகாபா என்ற இடத்தில் கூடி “நாங்கள் இஸ்லாத்தைத் தழுவி விட்டோம். இறை தூதரின் ஆணைப்படி இனி ஒரே ஆண்டவனைத் தவிர வேறொரு கடவுளைத் தொழமாட்டோம்,