பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கிருத்துவ மதம்

கடவுளுக்கும் மனிதனுக்கும் தொடர்பு படுத்திய யூத மதக் கொள்கைகளை முதலில் கண்டோம். அதிலிருந்து கிளர்ந் ததுதான் இயேசுவின் கிருத்துவமதம்.

ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்ல கேமிலே இயேசு பிறந்தார். (மத்தேயு 2:1) பெத்லகேமில் உள்ள ஒரு சத்திரத்துத் தொழுவத்தில் வைக்கோல் பரப்பின் மேல், புள்ளினங்கள் இசைபாட குதிரைகளின் காவலோடு எளிமையாக இயற்கையின் மடியில் அவதரித்தார் இயேசு. தேவகுமாரன் பூலோகத்தில் அவதரித்திருப்பதாக எண்ணங் கொண்டவான நூலோர் மூவர் தேடிவந்ததாகவும், வரும் வழி யில் ரோடியா மன்னனைக் கண்டு, தலைவனுக்குத் தலைவன் அவதரித்ததை தரிசிக்கச் செல்கிருேம் என்று சொல்ல, தனக்கு மேலும் ஒருதலைவன என்று பொருமை கொண்டு, அவ்வரசன் பெத்லகேமிற்குச் சென்று, பல குழந்தைகளைக் கொன்றதாக வும் பைபிள் கதைகள் கூறுகின்றன. தச்சு வேலை செய்து எளிமை வாழ்வு நடத்திய.ஜோசப் என்பவருக்கும் மேரி என்ற பெண்ணுக்கும் மகளுகப் பிறந்த இயேசு, தன் குடும்பத் தொழிலைத் தொடர்ந்து செய்து வந்தாலும், அந்த இளமை மனம் இறைவனின் அழைப்பிற்கு ஏங்கியதே தவிர, இல்லற சுகத்தை நாடவில்லை. எழுதவும் படிக்கவும் வாய்ப்பாடமாகவே கற்றார். சிறு பிராயத்திலிருந்தே ஜெருசலத்தில் வருடந் தோறும் நடைபெறும் விருந்து விழாவுக்குச் சென்று வந்த தால், பல தரப்பினர் குழுமி மதக் கருத்துக்களேயும் உலக