பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள்

139

என்றாலும். அபாயம் சூழ்ந்துவிடுமோ என்று கருதி சன்னும், வியாங்கேஷேக்கும், நண்பனும் ஜப்பானுக்குப்போய் அங்கிருந்த கொமிண்டாங் கட்சியை புரட்சிக் கட்சியாக மாற்றியமைத்தனர். யுவான் ஷிகேயின் கொடுங்கோன்மையால் அமைச்சர்கள் சிலர் விலகிக்கொண்டானர். ஆறு மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. 1916ம் ஆண்டு யுவான்ஷிகே மாண்டு போனான்.

மணவிலக்கு, மறுமணம்

சன்னுடைய முற்போக்குக் கருத்துக்கள் முதல் மனைவி லூசுக்குப் பிடிக்காமலேயே வாழ்ந்து வந்தாள். என்றாலும் அவள் விருப்பத்தைப் பெறாமல் சிவ்லிங்கை மறுமணம் செய்து கொள்ளக்கூடாதென்று கருதி, லூசுவை ஜப்பானுக்கு வர வழைத்து இருவரும் கலந்து பேசி மணமுறிவு செய்து கொண்ட பிறகு, டோக்கியோவில் மிக எளிய முறையில் சிவ்லிங்கை திருமணம் செய்துகொண்டு, அவளோடு பத்தாண்டுகள் வாழ முடிந்தது.

நெடுநாட்களாக இவனைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்த புற்றுநோய் இவனைச் செயலற்றவனாக ஆக்கிவிட்டது. ஆறு வாரங்கள் படுக்கையிலே கிடந்து, இனி தேறமாட்டோம் என்ற முடிவுக்கு வந்த பிறகு, இரண்டு உயில்களை எழுதச் செய்தான். அதில் சீனத்தின் எதிர்காலத்தைப் பற்றி எழுதியது ஒன்று. குடும்பத்தைப் பற்றி எழுதிய இரண்டாவது உயில் வருமாறு:

“மக்களுக்குத் தொண்டு செய்வதிலேயே என் வாழ்க்கை முழுவதையும் செலவழித்துவிட்டபடியால், என் சொந்தத்திற் கென்று ஒன்றையும் சேர்த்து வைக்க நான் விரும்பவுமில்லை; நேரமுமில்லை. எனக்கென்று சொல்லக் கூடிய, அதாவது நூல்கள், துணிமணிகள், வீடு இவற்றை என் மனைவிக்குச் சொந்தமாக்கி விட்டுப் போகிறேன். என் பிள்ளைகள் பெரியவர்களாய்விட்ட படியால், அவர்களே உழைத்து வாழட்டும்”