பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் 211

கியர்களாக, கெட்டவர்களாக, சொல்வதையெல்லாம் ஏன், எதற்கு என்று கேட்காத மக்குகளாக இருங்கள் என்று எவன் சொல்வான். ஆகையாலே அவன் தர்க்க வாதத்தை முறியடிக் கக்கூடிய வல்லமை எந்த மன்னனுக்குமே, எந்த மடாலயங் களுக்குமே இருந்ததில்லை.

அவன், வலிப்பு வந்து, ஈளையும் இருமலும் வாட்டி, கை கால்கள் விழுந்து, கண்ணும் தெரியாமல், காதுகளும் கேட்கா மல் மோசமான மரணத்தில்தான் போவான் என்று கதவுகளை மூடிக்கொண்டு சபித்தனர் மதகுருக்கள். ஆனல் அவன், உண்மை, பேய் பிசாசுகள், புனித விவிலியம், நாம் காப்பாற்றப் படுவது எப்படி, நன்றி சொல்லும் சடங்கு, கடவுள்கள், எப்படி மனித இனத்தைக் காப்பாற்றுவது, கலையும் பண்பாடும் என்பதைப்பற்றி எல்லாம் பேசித் தீர்த்துவிட்டு, தன் குடும் பத்துக்காக ஒரு சிறிய எஸ்டேட்டை வைத்துவிட்டு ஜூலை 28ம் நாள் 1899ம் ஆண்டு, தன் அறுபத்தி ஆறுவது வயதில் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே உயிர் விட்டான்.

இங்கர்சாலின் சொற்பொழிவு

இராபர்ட் இங்கர்சால் அறிவை நம்பியவன். ஆண்டவனைப் பற்றியும், அவனைப்பற்றி சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் பற்றியும், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, மதவாதிகள், அவர்கள் செய்த பிரசாரங்கள், அதற்கு மயங்கி பாமர மக்கள் கொட்டிக்கொடுத்த காணிக்கைகள், இல்லாத ஒன்றை, இருக்க முடியாத ஒன்றை இருந்ததாக, இருப்பதாக, அல்லது உலகில் கடைசி மனிதன் அறிவு தெளிவுபெற்றுத் தன்னைத் தானே அறிகின்றவரையில் என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டிருக்கின்றன, அதனல் மடாலயங்களிலும், மன்னர் மாளிகைகளிலும் குவிந்த பொருள்கள் எவ்வளவு, அதே நேரத்தில் மக்கள் வறுமையால் வாடி சிந்திய கண்ணிர் எவ்வளவு, தூக்கிலேறிய மக்கள் எவ்வளவு பேர், விசாரணை