பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் 155

வைத்து நகரப் பொதுச் செலவில் காப்பாற்றப் படவேண்டி யவன், இருட்குகையில் கம்பிகளுக்குள்ளே, கள்ளர்கள் மத்தி யிலே தள்ளப்பட்டான். இது ஏதன்ஸ் நகருக்கே சகிக்க முடி யாத அவமானம்.

“எத்தனையோ பேர்கள் அவரது உரையாடலைக் கேட்டு உயர்நிலை அடைந்திருந்தும், அதைச் சற்றும் பாராட்டாமல் இவருக்குக் கொலேத் தண்டனையை விதித்துத் திராப் பழியைத் தேடிக் கொண்ட சிறியோர்’ என செளுபோன் என்ற அவரது நண்பன் கண்ணிர் மல்கினன்.

“மிக்கோரே! மாண்டு போங்கள், என்று துணிந்து சொல்லி விட்டோம். நமது கண்ணிர் வெள்ளத்தாலும் கால வெள்ளத் தாலும் துடைக்க முடியாத கறை’ என்று அவனது அருமை நண்பன் பிளாட்டோ மனம் கசிந்துருகி வாழ்க்கையையே வெறுத்து விட்டான்.

சாக்ரடீஸ் சிறையிலும் ஓய்ந்திருக்கவில்லை. ஈஸ்ாப்ஸ் எழுதிய கற்பனைக் கதைகளைச் செய்யுட்படுத்தினர். இடை இடையே சிம்மியாஸ், கெபெஸ், பியோடன் முதலானவர்கள் அடிக்கடிச் சந்தித்து இன்னும் தெரிந்துகொள்ள வேண்டு வதைப் பற்றி உரையாடிச் சென்றார்கள்.

நகரில் அபோலோ என்ற தெய்வத்திற்குச் சிறப்பாக விழா நடந்துகொண்டிருந்தது. மக்கள் குது.ாகலக் கடலில் ஆழ்ந் திருக்கின்றார்கள். ஆனல் சாக்ரடீஸ் மன்னிக்கப்படவேண்டு மென்று வாக்களித்தவர்கள் ளீடுகளில் துக்கங்கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். சாக்ரடீஸ் வீட்டில் ஒரே அழுகுரல். திருவிழாவில் எங்கு பார்த்தாலும் உரையாடிக் கொண்டிருக்க வேண்டிய சாக்ரடீஸ் இல்லை. அது அந்த விழாவுக்கு பெருங் குறைதான். -

சாக்ரடீசை எப்படியாகிலும் தப்பிக்க வைக்கவேண்டு என்று நண்பன் கிரீடோ 30-ஆவது நாள் விடிவதற்குள்ளே சிறைச்சாலைக்குள் நுழைந்துவிட்டான். ஆனல், கொஞ்சமும்