பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் 177

டாவது வயதில் தன் மனைவி ஆயிஷா உடனிருக்க உயிர் துறந் தார். ஒரு பேரியக்கத்தின் தோன்றலாகவும், இடி மின்னல் பூகம்பம் போன்றவற்றையெல்லாம் எதிர்த்து நின்ற பேருருவம் இன்று உலகமெல்லாம் பரவியிருக்கிறது.

குற்றமும் தண்டனையும்

மெக்கா, மெதீன-இந்த இடங்களில் நடக்கும் குற்றங் களும் தண்டனைகளையும் கேட்டால் மெய் சிலிர்க்கும்.

ஒருவன் திருடிவிட்டான் என்று நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபித்தால் அவன் கைகள் வெட்டப்படும்.

ஒருத்தி விபசாரம் செய்துவிட்டாள் என்று நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபித்துவிட்டால் அந்தப் பெண்ணைக் கும்பலில் விட்டுக் கல்லாலடித்துக் கொன்று விடுவார்கள்.

இதல்ை அங்குத் திருட்டோ, விபசாரமோ நடப்பதில்லை. வேறு மதத்தினரை அங்கு அனுமதிப்பதில்லை. அவர்கள் அங்கு போவதுமில்லை. தொழுகை நேரத்தை அறிவிக்கும் பாங்கர் ஊதியவுடன் கடைகளே அப்படி அப்படியே திறந்தபடியே விட்டுச் சென்று விடுவார்கள். ஒரு துரும்பும் அசைவதில்லை. கீழே கிடந்து எடுத்தேன் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் அதை நிரூபிப்பதற்கும் நான்கு சாட்சிகள் வேண்டும். -

கப்பலில் போனல் ஐந்து நாட்களும், விமானத்தில் போளுல் ஐந்துமணி நேரமும் பிடிக்கிறது அங்கே போவ தற்கு. மெக்காவில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு அலுவலகம் உண்டு. அதில் தங்களுக்குத் தேவையான வசதி களைச் செய்து கொடுக்கிறார்கள். ஹஜ் யாத்திரை அதாவது மெக்கா மெதினவுக்குப் போய் வந்தவர்களைத்தான் ஹாஜியார் என்று மரியாதையோடு அழைக்கிறார்கள். உலக முழுவதி லிருந்தும் முஸ்லீம் மக்கள் வந்து கூடுவதால் எப்போதும் அவ்வூர் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். தொழுகைக்குப் போகின்றவர்கள் ஆண்டியாயிருந்தாலும் அரசயிைருந்தாலும்