பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

புரட்சி செய்த

கொண்டிருப்பேன். பதினெட்டாம் நூற்றாண்டை அறிவு யுகமாக ஆக்கிக்கொடுத்தவர்களில் தலைசிறந்தவர் வால்டேர். அந்த நூற்றாண்டை வால்டேரின் நாற்றாண்டு என்று அழைத்தாலும் பொருந்தும்.

lf man is created free, he should govern himself alone,
If man hastyrants over him, he should turn them from their throne.

ருஷ்ய அரசியான காதரின் அடிக்கடி வால்டேருக்குக் கடிதங்கள் எழுதி மனக்குறையைத் தெரிவித்துக் கொள்வாள். அவள் வருத்தப்படும் போதெல்லாம் வால்டேர் தனக்கு எழுதிய கடிதங்களைப் படித்து ஆறுதல் பெறுவாள். டென்மார்க் மன்னனான ஏழாவது கிரிஸ்டியன், கடிதங்கள் மூலமாகவே வால்டேரின் பிரதம சீடனாகிவிட்டான். ஸ்வீடன் நாட்டு மன்னன் மூன்றாவது கஸ்டவஸ் (Gustavus III) வால்டேரின் தார்மீகத் தத்துவங்களைத் தன் வாழ்வின் ஒளி விளக்காகக் கொண்டிருந்தான். பிரடிரிக் (Fraderick the Great) பட்டத்து இளவரசனாக இருந்தபொழுதே தனது மாளிகையின் குருவாக ஏற்றுக்கொண்டான்.

இங்கிலாந்து மக்களைப் பற்றி எழுதிய கடிதங்கள் (Letters on the English) மிகவும் புகழ் பெற்றவை. உண்மையான சுதந்திரத்தை அங்கே கண்டதன் விளைவாக எழுதியவை அவை. பிரெஞ்சு அரசாங்கம் தன்னை மறுபடியும் தண்டிக்கும் என்று தெரிந்தவுடனே தப்பி ஓடிவிட்டார். எவனும் தன்னை இன்பத்துக்குப் புறம்பாக்கிக் கொள்ளக் கூடாது என்பதே அவர்சிந்தனை. இன்பக் கேளிக்கையின் தெய்வீக உரு (Divinity of Gaiety) என்று முன்பு அவர் பிரான்சைவிட்டுப் புறப்பட்ட போது 25 வயதான எமிலி என்பவளை அழைத்துச் சென்று தங்கிவிருந்த இடம் சைரி (Cirey) என்பதாகும். இங்குத் தங்கியிருந்த போதுதான் மிகவும் சக்தி வாய்ந்த கதைகளான கேண் டைட் (Candide), மிக்ரொமெகாஸ் (Micromogas) முதலியவைகளை எழுதி முடித்தார். இவற்றுள் கேண்டைட் என்ற