பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

உலக

டாவது; நன்மை செய்வது. பாவம் என்பது ஒழுக்கமின்மையின் மிகுதி.

வன்முறையை முக்கியக் குற்றமாகக் கருதினாலும் மேற்கொண்டு பதினேழு நியதிகள் கண்டிக்கப்படுகின்றன. 1. பொய்மை 2. ஒழுக்கின்மை 3. கற்பின்மை 4. ஏய்த்தல் 5. கோபம் 6. அகந்தை 7. கபடம் 8. லோபித்தனம் 9. பொறாமை 10. பிரியம் (பொருள் அல்லது மனிதரிடம்) 11. பகைமை, வெறுப்பு 12. கலவரத்தன்மை, அடாபிடித்தனம் 13. கோள் சொல்லுதல் 14. புறங்கூறல்-தந்திரமாகத் தாக்குதல் 15. குற்றஞ் சொல்லல் 16. தன்னடக்கமின்மை 17. தவறான கொள்கையில் நம்பிக்கை இவையாவும் பாவமாகக் கொள்ளப்படும்.

ஜைனர்கள் போற்றவேண்டிய மூன்று ரத்தினங்கள் என்று சொல்லப் படுபவையாவன: நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம்.

ஜைன மத நம்பிக்கையில் ஆர்வம் கொண்ட பிம்பிசாரன் என்ற மன்னன், ‘ஜைன சங்கத்தில் சேர்ந்து ஒருவர் துறவறம் ஏற்றால், அவரின் உற்றார் உறவினரை ஆதரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்’ என்று பறை அறிவித்தான். இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடும்பக் கவலை விட்டதென்று ஜைன மதத்தில் சேர்ந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. ஜைனமதம் விரிவடைந்ததற்கு இதுபோன்ற செயல்கள் ஊக்குவித்திருக்கின்றன.

பிம்பிசாரனும் ஜைனனாக விரும்பிக் கேட்டபோது, அவனுக்கு முதலில் ஐந்து குற்றங்களை நிக்கிவிட்டு வரும்படி சொல்கிறார். “என்னுடைய உபதேசங்களில் அவநம்பிக்கை கூடாது. கர்மம் அல்லது வினை, நிர்வாணத்தைப் பற்றிய சந்தேகம் கூடாது. தங்களைத் தெய்வமாகச் சொல்லிக் கொள்ளும் கள்ளத் துறவிகள், போலி மதாசாரியர்களைப் புகழக் கூடாது. தீயவர்களோடு பழகக் கூடாது. இத்துடன் பன்னிரண்டு விரதங்களை மேற்கொள்ளவும் சொல்