பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 உலகைத் திருத்திய

ஒரு வலிமை மிக்க ஜார் அரசாங்கத்தை அழிக்கக் காரண மாயிருந்த கார்ல் மார்க்சை ஒன்றும் செய்யமுடியவில்லை. நான்கைந்து முறை நாடு கடத்தியதைத் தவிர. அவன் வெளி யிட்ட பத்திரிகைகளே வாங்காமல் விட்டதைத் தவிர வேருென்றும் அவனே வாட்டியதில்லை. ஆனல் வாழ்க்கையின் வறுமையை எவ்வளவு ஆழமானது என்பதை அறிய, அதன் அடிவாரத்திற்கே இறங்கியவன் மார்க்ஸ். மனைவி மிகுந்த செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவள், என்றாலும் ஏழ்மை

தந்தையோ வழக்கறிஞன், என்றாலும் வறுமை. சில பத்திரிகை களுக்கு எழுதியதில், அதாவது அமெரிக்காவிலிருந்து வெளி வந்த ஒரு சில பத்திரிகை முதலாளிகள் அனுப்பிய சிறிய தொகைதான் அவனது வருமானம்.

நான்கு குழந்தைகளைப் பெற்றெடுக்கின்ற வரையில் வறுமை. நாம் படித்த வரலாற்றில் இவ்வளவு வறுமையை அனுபவித்தவர்கள் யாரையும் காளுேம். அறிஞன் ரூசோ கூட, தான் பெற்ற ஐந்து குழந்தைகளே மருந்துவ மனையிலும், அனதைவிடுதியிலும் விட்டுவிட்டு வந்தான் என்று படிக் கிருேம். அவனுக்குக் கூட இவ்வளவு வறுமை வந்ததில்லை. எந்தத் தொழிலாளர்களின் வறுமையைப் போக்க வந்தானே அந்த வறுமைகள் எல்லாம் சேர்ந்து இவனைப் பற்றிக்கொண்ட தென்றே சொல்லலாம்; தன் மெல்லிய கரங்களால் பலர் கண்ணிரைத் துடைத்தான். ஆளுல் இவன் கண்ணிரைத் துடைக்க ஒருவனே முன்வந்தான். அவன்தான் சீமான் மகளுயிருந்தும், மான்செஸ்டரில் ஒரு நூற்பாலேயின் சொந்தக் காரணுயிருந்தும் கருணை உள்ளம் கொண்ட ஏஞ்சில்ஸ்.

கார்ல்மார்க்ஸ் தந்தையின் பெயர் ஹிர்ஷெல், தாய்

ஹென்ரிட்டே இவன் ஒரு யூதன். வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்தான். அதில் முன்னேற்றமில்லை, காரணம் இவன் ஒரு கைதேர்ந்த வழக்கறிஞயிைருந்தும் யூதன் என்ற ஒரே காரணத்தினல் கட்சிக்காரர்கள் நிறைய வழக்குகளைக் தொண்டுவருவதில்லை. ஏனெனில் யூதர்களுக்கு எந்த நாட்டி லும் எந்த நாளிலும் தொல்லைதான். யூதர்கள் என்றாலே ஒரு