பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் - 215

மதவாதிகளால் எது புனிதமானது என்று நம்மேல் சுமத்தப்பட்டதோ அது புனிதமானதல்ல. இப்புடி ஒப்புக் கொள்ளாதவர்களை மடாலயமும், மாளிகையும் சும்மா விட்டதா. அப்படிச் சொன்னவர்கள் வாய் சீலிடப்பட்டது. அவர்கள் உலகுக்குக் காட்டிய ஜோதியை அவர்கள் இரத்தத் தாலேயே அணைக்கப்பட்டு விட்டது. நமக்கேன் இந்தத் தொல்லை என்று சில சிந்தனையாளர் பயந்து போனர்கள். சிலர் தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை என்று துணிந்து சொன்ஞர்கள். அவர்கள் அடைந்த கதியென்ன?

உண்மையைத் துணிந்துசொன்ன சாக்ரடீஸ் முடிவென்ன? ஜான் ஹெல் கதி என்ன? புரோனிவின் பரிதாப முடி வென்ன? சவனரேயாவின் முடிவென்ன? ஏன் இயேசுவின் கதி என்ன? சிலுவையில் அறைந்து அவர் இரத்தத்தை ஆண்டவனுக்கு கொடுத்தாலன்றி, ஆண்டவன் கோபம் தணியாது என்பதுதானே அவர்கள் வாதம். இயேசுவின் இரத்தம் மாத்திரமா, எத்தனை பேர் இரத்தத்தை குடித்திருக் கிரும் ஆண்டவர், இன்னும் அவர் தாகம் தீரவில்லை.

உண்மை ஆராய்ச்சி செய்யச் சொல்கிறது. யோக்கியனுக யிருக்கச் சொல்கிறது. ஏன் நாம் ஆராயவேண்டும். யோக் கியனயிருக்க வேண்டும். ஏன் இவற்றையெல்லாம் ஊருக்குச் சொல்லவேண்டும். உலக நன்மைக்காக. நோய் வருவது எதளுல்? மனிதன் கண்டுபிடித்தான். அதை குணப்படுத்துவது எப்படி, மனிதன் கண்டுபிடித்தான். வேகமாக பயணம் செய்வது எப்படி? மனிதன் கண்டுபிடித்தான். நீராவியின் வேகமென்ன? மனிதன் கண்டுபிடித்தான். ஒளி, ஒளிக்கதிர் களின் தன்மை, பயன் என்ன? மனிதன் கண்டு பிடித்தான். இவற்றில் ஒன்றுமே கண்டுபிடிக்காமல் பரலோகத்தில் சிங்கா தனத்தில் வீற்றிருக்கும் கடவுள்களைக் கீழே தள்ளுங்கள். அந்த சிங்காதனங்களை உடைத்தெறியுங்கள். அங்கே ஒரு குண்டம் எரிந்துகொண்டிருக்கிறது என்கிறார்களே, அதை அணையுங்கள். பக்தியுள்ள பிச்சைக்காரர்கள் யோக்கியர்களாக பிழைக்க வழி தெரிந்தவர்களாக மாறட்டும். தம்முடைய விலையுயர்ந்த