பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

உலகைத் திருத்திய

நோக்கத்தால் குடியரசு முறையை ஆதரிப்பதாகவும் சன்னோடு ஒத்துழைப்பதாகவும் ஒரு அறிக்கையை வெளியிட்டான். இதை வெள்ளையுள்ளம் படை த்த சன்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை.

ஆகையால் சன் வகித்தருந்த தலைவன் பதவியை 1912ம் ஆண்டு, பிப்ரவரி திங்கள், இருபத்தி மூன்றாம் நாள் ராஜினாமா செய்து, ஷன்யுவான்கே என்பவனைத் தலைவனாக்கினான். இப்படி பதவியை விட்டுக்கொடுத்தது ஓய்வு எடுப்பதற்காக அல்ல. சீனாவை சீர்திருத்தியமைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான். ஆனால் இவனை ரயில்வே டைரக்டராக நியமித்தான் ஷன்யுவான்கே. அந்த வேலையாக நாட்டைச் சுற்றிவரும் போதுதான் யுவான்கேயின் துரோகத்தை தெரிந்துகொண்டான். மேலும் சன்னுக்கு மிகவும் வேண்டியவர்களை அழைத்து சிரச்சேதம் செய்துவிட்டான். பிறகு சன்னையும் ஹுவாங் சிங்கையும் கொன்றுவிட திட்டமிட்டு அழைத்தான். போக வேண்டாமென நண்பர்கள் தடுத்தனர். என்றாலும் பொருட்படுத்தாமல் பீகிங் நகரம் போய்ச் சேர்ந்தான். நகர மக்கள் இவனுக்குக் கொடுத்த வரவேற்பைக் கண்டு யுவான் குலைநடுங்கிப் போனான். யுவான் போக்கைக் சன் மனம் வெதும்பி நினைத்து ஒரு தந்தியைக் கொடுத்தான்.

அதில், “நாட்டின் கடினமான பொறுப்பை நிறைவேற்ற நீங்கள் முந்தி அழைக்கப்பட்டீர்கள் தலைவராக. இப்போது நாடு தொல்லையில் அகப்பட்டுக் கொள்ளாதிருக்கும் பொருட்டு பதவியிலிருந்து நீங்கள் விலகவேண்டும். என்னுடைய ஆலோசனையை நீங்கள் ஏற்றுக் கொள்வதாயிருந்தால், நாட்டின் தெற்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் போர்வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆயுதங்களைக் கீழே வையுங்கள் என்று என்னால் சொல்ல முடியும், என்னுடைய இந்த ஆலோசனையை நீங்கள் கேட்காவிட்டால், குடியாட்சிக்கு அதாவது மஞ்சு ஆட்சிக்கு விரோதமாக நான் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கும்படி நேர்ந்ததோ அதே நடவடிக்கைகளை உங்கள் பேரிலும் எடுக்க நேரிடும்.”