பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் I75

திருடமாட்டோம், எங்கள் குழந்தைகளைக் கொல்லமாட் டோம், பிறர்மேல் பொய்க்குற்றம் சுமத்தமாட்டோம், நபிகளுக்கு கீழ்ப்படியாமாலிருக்கமாட்டோம்’ என்றுறுதி எடுத்துக் கொண்டு ஆண்டுக்காண்டு மெதின மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து இஸ்லாத்தைத் தழுவத் தொடங்கினர். இரண்டாவது முறையாக எழுபத்தி மூன்று ஆண்களும்: இரண்டு பெண்களும் சேர்ந்தார்கள். இப்படி மெதின மக்கள் சிறுகச்சிறுக பெருமளவு சேர்ந்ததாலும், பலர் வெளிநாடு களுக்கு ஒடிவிட்டதாலும், மெக்கா மக்கள் தொகை குறையத் தொடங்கியது. அதன் பிறகுதான் நபிகள், அபூபகர் என்ப வரையும், அலி என்பவரையும் அழைத்துக்கொண்டு மெக் காவை விட்டு மெதினவுக்கு புறப்பட்டார்கள். இதையறிந்த குரைஷிகள் வெளியே போகவிடக்கூடாதென்றும், கொன்று விட வேண்டுமென்றும் சதி செய்த செய்தியை முன்னதாகவே அறிந்த நபிகள், இரவோடு இரவாக அபுபகர் என்பவரை அழைத்துக்கொண்டு. மூன்று கல்தொலைவிலுள்ள தபுர் என்ற குகையில் ஒளிந்துகொண்டார். அதையும் கண்டுபிடித்து அந்த குகைவாயிலை போய்ப்பார்த்தபோது முகப்பில் சிலந்தி கூடு கட்டியிருந்தது. ஆகையால் மனிதர்கள் யாரும் போயிருக்க முடியாது என்று திரும்பிவிட்டனர். மூன்று நாட்கள் அந்த குகையிலேயிருந்து ஜூன் திங்கள் 22ம் நாள் கி. பி. 622ல் மெதினவுக்கு புறப்பட்டார். இந்த நாள் முதற்கொண்டு தான் ஹிஜிரா என்ற ஆண்டு தொடங்குகிறது. இப்போது மெதின ஒரு இஸ்லாம் நகரமாயிற்று.

இருந்தாலும் தொடர்ந்து பத்து ஆண்டுகள் மெக்காவி லிருந்த முஸ்லீம்கள் தொடர்ந்து போர் நடத்திய வண்ண மிருந்தனர்.

பாதர் போரில் மெக்காவாசிகளும் அவர்களின் தலைவர் களும் பலர் கொல்லப்பட்டனர். தோல்வியுற்றவர்கள் அடுத்த ஆண்டு மூவாயிரம் வீரர்களோடு உஹாத் என்றவிடத்திலே போர் தொடுத்தார்கள். இந்த முறை மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம்கள் உயிரிழந்து, நபிகளும் எழுநூறு பேர்களும்தான்