உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2. தமிழகம்

வட எல்லை

இன்றுள்ள தமிழ் இலக்கண இலக்கியங்களுள் காலத்தால் முற்பட்டது தொல்காப்பியம் அன்றோ? அஃது இற்றைக்கு ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்னலாம். அதன் பாயிரத்தில் பனம்பாரனர் என்ற புலவர்,

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறும் கல்உலகம்”

என்று கூறியுள்ளார்.

“வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேயம்”

என்று சங்க நூற்பாடல்கள் செப்புகின்றன. கி. பி. என்று 12- ஆம் நூற்றாண்டிலும் வேங்கடப் பகுதியே தமிழகத்தின் வட எல்லையாக இருந்தது என்பது, “அருந்தமிழின் வழக்கங்கு நிகழா தாக” என்னும் சேக்கிழார் வாக்கைக் கொண்டு உணரக்கிடக்கிறது. காளத்தி மலைக்கு வடக்கே தமிழ் வழக்கு இல்லை என்பது சேக்கிழார் கூற்று. எனவே, தென்னிந்தியாவில் வேங்கடத்தை ஒட்டினாற் போலக் கிழக்கு மேற்காக ஒரு கோடு கிழிக்கப்படின், அக்கோட்டிற்குத் தென்பாற்பட்ட நிலம் முழுவதும் ஏறத்தாழப் பண்டைத் தமிழகம் என்று சொல்லலாம்.

தென் எல்லை

பனம்பாரனார் கூறிய எல்லைகளில் குமரி ஒன்று. அது குமரியாறு பாயப்பெற்ற, இன்றைய குமரிக்கும் தென்பாற்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/18&oldid=504905" இலிருந்து மீள்விக்கப்பட்டது