பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வேங்கடம் முதல் குமரி வரை

அண்ணாமலையை நினைக்கின்ற போதெல்லாம், இல்லை அண்ணாமலையானைக் கண்டு தொழுகின்ற போதெல்லாம் இறை வழிபாடு உலகத்தில் எப்படித் தோன்றிற்று, என்ற உண்மையுமே விளக்கமுறும். மனிதனுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் அவன் வாழ்வதற்கு ஒளியும் என்று அறிகிறோம். சூரியன் இல்லாத பகலும், சந்திரன் இல்லாத இரவும், நட்சத்திரங்கள் இல்லாத வானும் இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்ப்போம்.

இறைவனது படைப்புகளில் எல்லாம் சிறந்த படைப்பு ஞாயிறுதானே. அதனிடமிருந்து எழுகின்ற ஒளியும் வெம்மையும் இல்லாவிட்டால் உலகமும் உயிர்களும் உய்வதேது? ஆதலால் சிந்திக்கத் தெரிந்த மனிதன் ஞாயிறையே, ஞாயிறு மூலமாக அதனை உலகுக்குத் தந்த இறைவனையே வந்தித்து வணங்க முற்பட்டிருக்கிறான். இப்படித்தான் எல்லாச் சமயத்தாரிடத்தும் இறை வழிபாடு ஒளி வழிபாடாகவே உரு எடுத்திருக்கிறது. இருள் போக்கும் தன்மையோடு, மருள் நீக்கும் தூய்மையும்,ஆக்கி,காத்து அழிக்கும் தன்மையும், அருவாய், உருவாய், அருவுருவாய் இயங்கும் இயல்பும், பஞ்ச பூதங்களில் ஒன்றான தீயினிடத்தே தான் மிகுந்திருக்கின்றன. இப்படி அக்கினியின் இயல்பும் இறைவன் இயல்பும் இணைந் திருப்பதன் காரணமாக ஒளி வழிபாடே தீ வழிபாடாக பரிணமித்திருக்கிறது.

'இறைவனை ஞானச் சுடர் விளக்காய் நின்றவன் என்று அப்பர் பாடினால், ஆதி அந்தம் ஆயினாய், சோதியுள் ஓர் சோதியானாய் என்று சம்பந்தர் வழிபடுகிறார். சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று மாணிக்கவாசகரும், தூண்டா விளக்கின் நற்சோதி என்று சுந்தரரும் இறைவனை அழைத்தால், கற்பனை கடந்த சோதி, கருணையே