பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

195

மன்னவர்க்குத்தண்டுபோய்,
வடபுலத்து வாதாவித்
தொன்னகரம் துகளாகத்
துணைநெடுங்கை வரை உகைத்து,
பன்மணியும் நிதிக்குவையும்
பகட்டினமும் பரித்தொகையும்
இன்னன எண்ணில கவர்ந்தே
இகலரசன் முன் கொணர்ந்தார்

அவர், என்று சேக்கிழார் பாராட்டுகிறார். இப்படிப் போருக்குச் சென்று வீரர் எல்லாம் பலப் பல பொருள்கள் கொண்டு வர, சேனாதிபதி பரஞ்சோதியார் மட்டும் வாதாபிக் கோட்டை வாயிலில் இருந்த கணபதியைக் கைப்பற்றிக் கொணர்ந்து தம் சொந்த ஊராகிய திருச்செங்காட்டாங்குடியில் ஒரு கோயில் கட்டிப் பிரதிஷ்டை செய்து விடுகிறார். வாதாபிப் போரில் இரு தரத்து மக்களும் மற்ற உயிரினங்களும் பட்ட துயரை யெல்லாம் அறிந்து அன்றே சேனாதிபதிப் பதவியை உதறி விட்டு, துறவு பூண்டு தம் ஊரிலேயே தங்கி விடுகிறார், மனைவி வெண்காட்டு நங்கையுடனும், மைந்தன் சீராளனுடனும். இப்படித்தான் ‘தம் பெருமான் திருத்தொண்டர் சிறுத்தொண்டர்' என்ற பெயரோடு வாழ்ந்து வருகிறார் செங்காட்டாங்குடியில்.

இவரது தொண்டின் சிறப்பை உலகுக்கு உணர்த்த விரும்புகிறான் இறைவன். பைரவ வேடத்துடன் வந்து சேருகிறான். சிறுத்தொண்டரிடம் தன்னை உத்தராபதியான் என்று அறிமுகம் செய்து கொள்கிறான். அமுது செய்தருள வேண்டும் என்று கேட்ட சிறுத்தொண்டரிடம், 'ஒரு தாய்க்கு ஒரு மகனாக, அங்கம் பழுதில்லாத மைந்தன் ஒருவனை, அறுத்துக் கறி சமைத்துத் தந்தால் உண்போம்' என்கிறான். பள்ளி சென்ற பாலனாம் சீராளனையே அழைத்துவந்து, சிறுத் தொண்டரும், வெண் காட்டு நங்கையும் அரிந்து கறி சமைக்கிறார்கள். உத்தராபதியாரை உள்ளே அழைக்கிறார்கள். எழுந்தருளிய அவரோ, உடன் உண்ணப் பிள்ளையை அழைக்க