பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

203

22

கண்ணபுரத்து அம்மான்

காளமேகப் புலவர் என்றால் யார் என்று தமிழர்களுக்கு எல்லாம் தெரியும். ஆனால் அவரது பூர்வாசிரம வரலாறு எல்லோருக்கும் தெரிந்திராது. வைஷ்ணவ மரபிலே பிறந்த இவர் ஸ்ரீரங்கம் பெரிய கோயிலிலே பரிசாரகராக இருந்திருக்கிறார். ஆனால் இவரது ஆசையோ திருவானைக் காவில் உள்ள கணிகை ஒருத்தியிடம். அவளோ நல்ல சிவ பக்தை. வைணவரான இவரை ஏற்க மறுக்கிறாள். இவருக்கோ காதல் பெரிதே ஒழிய, கடவுள் பெரிது இல்லை. ஆதலால் வைஷ்ணவத்தை உதறித்தள்ளிவிட்டுச் சைவனாகவே மாறி விடுகிறார். சைவனாக மாறி, ஆனைக்கா கோயிலில் காதலிக்காகக் காத்துக் கிடந்த காலையில், அன்னை அகிலாண்டேசுவரியின் அருள் கிடைக்கிறது. அந்த அருள் காரணமாகக் கவிமழை பொழியத் துவங்குகிறார். நாற்கவி ராஜ நம்பியாகவே தமிழகத்தில் உலவுகிறார். திருமலைராயன் பட்டினத்தில், யமகண்டம் பாடி அதிமதுர கவிராயரை வென்று வெற்றிக் கொடியே நாட்டுகிறார். மதம் மாறிய புதிய சைவர் ஆனதால் விஷ்ணுவைப் பாடுவதில்லை என்ற வைராக்கியம் உடையவராக வாழ்கிறார்.

ஒரு நாள் இரவு இவர் கண்ணபுரம் வருகிரார். கண்ணபுரம் என்ற உடனேயே தெரியும் அங்கு கோயில்