பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

வேங்கடம் முதல் குமரி வரை

பிரமாதம். கர்ப்பக் கிருஹத்தைச் சுற்றிய பிராகாரம் ஒன்றே ஒன்றுதான். அந்தப் பிராகாரமும், கோயிலின் கர்ப்பக் கிருஹமும் முழுக்க முழுக்கக் கல்லாலேயே கட்டப்பட்டவை. ராஜேந்திரன் தன் கடார வெற்றியைக் கொண்டாக் கட்டியிருக்க வேண்டும். இக்கோயிலின் மேற்கு நோக்கிய கோஷ்டத்தில் நல்ல லிங்கோத்பவர் இருக்கிறார். தெற்குக் கோஷ்டங்களில் தக்ஷிணாமூர்த்தியும் விநாயகரும் இருக்கிறார்கள். விநாயகர் நல்ல காத்திரமான உரு. பருத்த தொந்தியுடன் நன்றாகச் சப்பணம் கூட்டியே உட்கார்ந்து விடுகிறார் அவர். வட பக்கத்துக் கோஷ்டத்திலே பிரம்மா நின்ற திருக்கோலம். துர்க்கை மிகவும் கம்பீரமாக நிற்கிறாள், அங்கு சக்கரம் ஏந்தியகையாளாய். ஒருகரத்தால் அபயம் அளித்து ஒரு கையை இடுப்பில் வைத்து, ஒரு கால் மடக்கி ஒரு காலை நீட்டி, கன கச்சித

அறுமாமுகன்

அழகோடு உருவாகியிருக்கிறாள் கல்லிலே. இரண்டு முனிவர்கள் காலடியிலே வணங்கி நிற்கிறார்கள். கலை உலகிலே ஒரு அற்புத சிருஷ்டி. இந்த ஐந்து விக்கிரகங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தவே, இந்தக் கோயிலுக்கு உங்களை அழைத்து வந்திருக்கிறேன் இத்தனை தூரம்.

இவர்களையெல்லாம் கண்டு களித்த பின்னரே நற்றுணை