பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

191

வழிபடுகிறார்கள். அம்பர் மாகாளம் என்னும் கோயில் திருமாகாளத்தில் உள்ள கோயிலே சோமாசிமார நாயனார், அவர் மனைவி, சுந்தரர், பரவை இவர்களது வடிவங்கள் இருக்கின்றன. இவர்களுக்கு எதிரில் தியாகராஜர் அவரது தேவியின் படிமங்களும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, பறையன் உருவில் வந்த சிவபிரானது வடிவமும் பின்னர் சோமாசிமாரருக்குத் தன் உண்மை உருவைக் காட்டிக் காட்சி கொடுத்த நாயகர் வடிவமும் இருக்கின்றன செப்புச்சிலை வடிவில். இரண்டும் நல்ல அழகு வாய்ந்த திருவுருவங்கள். பறை கொட்டும் பாணியிலே, உமையையும் பறைச்சியாக்கிக் கூட்டிக்கொண்டு வரும் அழகுதான் என்னே !

இக்கோயிலுக்கும் இதனை அடுத்த அம்பர் பெருந்திருக்கோயிலுக்குமே ஞானசம்பந்தர் வந்திருக்கிறார்.

பழக மாமலர் பறித்து, இண்டை கொண்டு
இறைஞ்சுவார் பால் செறிந்த
குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார்,
அவர் பலர் கூட நின்ற
கழகனார், கரி உரித்து ஆடும்
கங்காளர், காளி ஏத்தும்
அழகனார், அரிவையோடு இருப்பிடம்
அம்பர் மாகாளந்தானே

என்பது தேவாரம். ஞானசம்பந்தர் போக மறக்காத அம்பர் பெருந்திருக்கோயிலுக்கு நாமும் போய் வந்து விடுவோம். கோயில் கட்டு மலைமேல் இருக்கிறது. கோச் செங்கட்சோழன், யானை ஏறாப் பெருந்திருக்கோயிலாகக் கட்டிய மாடக் கோயில்களில் ஒன்று இது, கோயில் கிழக்கு நோக்கியிருக்கிறது. நாலு பக்கமும் இலுப்பை மரங்கள் சூழப்பட்ட தோப்பின் மத்தியில் இருக்கிறது. கோவிலுக்கு எதிரில் வடபக்கம் இந்திர தீர்த்தம் இருக்கிறது. மேக ராஜாவின் பெயரில் ஏற்பட்டிருக்கும் இக்குளத்திலோ தண்ணீர்