பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

205

தொலையாத பிறவி எடுக்கும் மனிதன் இன்னும் பெரியவன்தானே. கணக்கும் சரியாக இருக்கிறதே. இப்படிக் கணக்குப் போட்டுக் கண்ணபுரமாலை அறிமுகப்படுத்தி வைக்கிறார் காளமேகம் நமக்கு, அந்தக் கண்ணபுரத்தானைக் காணவே இன்று போகிறோம் நாம் கண்ணபுரத்துக்கு.

இக்கண்ணபுரம் தஞ்சை ஜில்லாவில் நன்னிலம் ரயில்வே ஸ்டேஷனுக்குக் கிழக்கே ஐந்து மைல் தொலைவில் இருக்கிற சிறிய ஊர். முந்திய நாட்களில் நேரே திருமருகல், திருச்செங்காட்டாங்குடி எல்லாம் சென்று சுற்றிவளைத்துக் கொண்டுதான் இத்தலம் வந்து சேரவேணும். இப்போதோ, திருப்புகலூர்வரை நல்லரோட்டில் சென்று முடிகொண்டான் ஆற்றின் மேல் கட்டப்பட்டிருக்கும் பாலத்தைக் கடந்து, மண் ரோட்டில் ஒரு மைல் சென்றால் இத்தலத்துக்கு வந்து சேரலாம். இந்தத் தலத்தின் தேர்வீதி எல்லாம் மிக மிக விசாலமானது. வண்டியில் சென்றால் நம்மை, கோயிலுக்கும் நித்ய புஷ்கரணிக்கும் இடையில் உள்ள பாதையில் இறக்கிவிட்டு விடுவர். அதன்பின் ராஜகோபுரத்தைக் கடந்து, கோயிலினுள் செல்லலாம். கண்ணபுரத்தானுக்கு நம்மிடம் யாதொரு பகையும் இல்லையே. ஆதலால் நாம் செல்லும்போது காள மேகத்துக்கு அடைத்தது போல் கதவடைத்து நிறுத்தி விடமாட்டான். கோயிலில் நுழைவதற்கு முன்பே இத்தலத்தின் மகிமைகளை அர்ச்சகர்களிடம் கொஞ்சம் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. இத்தலம் கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம் என்றும், அஷ்டாக்ஷர மகாமந்திர சித்தி க்ஷேத்திரம் என்றும் பெயர் பெற்றது. திருவரங்கச் செல்வனார்க்கு இது கீழை வீடு. முத்திதரும் தலங்கள் எட்டு என்பர். திருவரங்கம், திருவேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், வானமா மலை, சாளக்கிராமம், புஷ்கரம், பதரி ஆச்சிரம், நைமி சாரண்யம் அவை. அஷ்டாக்ஷரமத்திரத்தில் ஒவ்வொரு அக்ஷர சொரூபியாக இந்த எட்டு தலங்களிலும் எழுந்தருளியிருக்கிறான் பரந்தாமன். ஆனால் எல்லாப் புண்ணியங்