பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123

13

வெண்காடு மேவிய விகிர்தன்

பேய் அடையா, பிரிவு எய்தும்
பிள்ளையினோடு உள்ள நினைவு
ஆயினவே வரம் பெறுவர்,
ஐயுறவேண்டா ஒன்றும்,
வேய் அனதோள் உமைபங்கன்
வெண்காட்டு முக்குள நீர்
தோய் வினையார் அவர் தம்மைத்
தோயாவாம் தீவினையே

என்பது ஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகத்தில் ஒரு பாட்டு. பாட்டு நல்ல சுவையானது. மயங்கி நையும் உள்ளத்துக்குத் தெம்பு கொடுக்கும் பாட்டு. இந்தப் பாட்டைச் சுற்றி ஒரு வரலாறு. வரலாறு இது தான். பெண்ணாகடத்திலே நல்ல சைவ வேளாளராக வசிக்கிறார் அச்சுத களப்பாளர். நீண்டகாலமாக அவருக்கும் அவர் மனைவிக்கும் ஒரு குறை, புத்திரப் பேறு இல்லையே என்று. ஆதலால் திருத்துறையிலே வசித்த தனது குலகுருவாகிய அருணந்தி சிவாச்சாரியாரிடம் விண்ணப்பித்துத் தம் குறை நீங்க வேண்டி இருக்கிறார். அவருக்குத் திருமுறைகளிடத்து நிரம்ப நம்பிக்கை. ஆதலால் திருமுறை ஏட்டை எடுத்து அதற்குப் பூசனை செய்து அதில் கயிறு சாத்துகிறார். கயிறு