பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

189

ஆச்சரியம் எல்லாம் இந்த உண்மையைத் தெள்ளெனத் தெரிந்து கொண்டல்லவா அந்தப் பெரியார் டால்ஸ்டாய் ஒரு அற்புதமான கதையை இந்தப் பகுத்தறிவு யுகத்திலே கூட மிக எளிதாகச் சொல்லியிருக்கிறார் என்பதுதான்). அம்பர் மாகாளத்துக்கும், அம்பருக்கும் இடையில் சோமாசிமார நாயனார் செய்த யாக குண்டம் இருக்கிறது. பறையனாக வந்தபோது 'ஒதுங்கிப் போ' என்று அந்தணர்கள் சொல்ல இறைவன் ஒதுங்கிய இடத்திலே இன்று ஒலியப்பர் கோயில் ஒன்று எழுந்திருக்கிறது. இந்த உத்சவம் வேறே வருஷந் தோறும் வைகாசி ஆயில்யத்திலே அம்பர் மாகாளத்திலே நடக்கவும் செய்கிறது.

இந்த ஒரு கதையைத் தெரிந்து கொள்ளவே இந்தத் தலத்துக்கு வரலாம். வந்த இடத்திலே இரண்டு கோயில்களில் உள்ள மூர்த்திகளை வணங்கலாம், மற்ற வரலாறுகளையுமே தெரிந்து கொள்ளலாம். முதலில் அம்பர் மாகாளம் சென்று அங்கு கோயில் கொண்டிருக்கும் மாகாளநாதர், பயக்ஷயநாயகி முதலியோரை வணங்கி விடலாம். இந்தத் தலத்துக்கு அம்பர் மாகாளம் என்று பெயர் வருவானேன்? இதைத் தெரிந்து கொள்ள அம்பன் அம்பரசுரன் சரிதையைக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேணும்.

ஒரு நாள் துர்வாசர் சிவபெருமானைக் காண அவசரமாகக் ககன மார்க்கமாய்ப் போய்க்கொண்டிக்கிறார். மதலோலா என்ற தேவகன்னிகை புத்திரப்பேற்றை விரும்பி அவரை அணுகுகின்றாள். எதற்கும் எளிதாகக் கோபப்படும் இந்தத் துர்வாசர் ஏதோ அன்று கருணைகூர்ந்து மதலோலாவுக்கு எவராலும் வெல்ல முடியாத அசுர அம்சம் உடைய இரண்டு புத்திரர்கள் பிறக்கட்டும் என்று ஆசீர்வதிக்கிறார். அம்பரன், அம்பன் என்று இரண்டு புத்திரர்கள் பிறக்கிறார்கள். (அம்பரத்திலே பிறந்தவன் அம்பரன்; அவன் தம்பி அம்பன்) இவர்கள் இருவரும் சிவ