பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

மாகக் கேட்டுச் சற்றே அவரை உரசலாயினள். அந்த உரசலில் வெட்கம் வந்து தன்னைக் கவ்விப் பிடிக்க, "ஆகிவிட்டது" என்றார் அவர் 'கேள்விக் குறி"யாக வளைந்து நெளிந்து.

"வெட்கப்படும்; எனக்குப் பதிலாக நீராவது வெட்கப் படும்!" என்று சொல்லிவிட்டு, "ஆமாம், உமக்கு எத்தனை கலியாணங்கள் இதுவரை நடந்திருக்கின்றன?" என்று சாமுத்திரிகா லட்சணியாகப்பட்டவள் கேட்க, "மூன்று" என்றார் சந்திரவர்ணராகப்பட்டவர்.

அடுத்த கேள்வி "குழந்தைகள் எத்தனை?" என்று பிறந்தது; பதில் "நாலு" என்று வந்தது.

"அப்படியானால் நீர்தானய்யா, எனக்குச் சரியான ஜோடி! உம்மை நான் 'காதல் பட்சணம்’ செய்ய விரும்புகிறேன்" என்று சாமுத்திரிகா லட்சணியாகப்பட்டவள் சகல திருப்திகளையும் ஒருங்கே அடைந்த மகிழ்ச்சியில் பட்டவர்த் தனமாகச் சொல்ல, "எப்போது கலியாணம் செய்து கொள்ளலாம்?" என்று சந்திரவர்ணராகப்பட்டவரும் பட்டவர்த்தனமாகக் கேட்க, "கலியாணத்துக்கு இப்போது என்னய்யா அவசரம்? வாரும், முதலில் டோக்கியோவுக்குப் போய் விட்டு வருவோம்.. அதற்குப் பின் கலியாணத்தைப் பற்றி யோசிப்போம்" என்று அவள் அவரை அழைத்துக் கொண்டு போய், அங்கே ஒரிரு மாதங்கள் இருந்து விட்டுத் திரும்பி வர, ஒரு நாள் சந்திரவர்ணராகப்பட்டவர் எதைக் கண்டாலும் தின்னப் பிடிக்காமல், "எங்கே மாவடு, எங்கே மாவடு"‘ என்று தேட, அதைக் கவனித்த படாதிபதியாகப்பட்டவர், "என்ன ஒய், சாமுத்திரிகா லட்சணி முழுகாமல் இருக்கிறாளா?" என்று தம் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே கேட்க, "அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது?" என்று சந்திரவர்ணர் அதிஅதி ஆச்சச்சரியத்துடன் கேட்க, "அனுபவம் உமக்குப் புதுமையாயிருந்தாலும் எமக்குப் பழமையாச்சே, ஐயா! இங்கே எந்த நட்சத்திரமாவது முழுகாமல் இருந்தால், அந்த நட்சத்திரத்தின் கணவன்தான் அவளுக்குப் பதிலாக மாவடு