பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

உயரமாயிருந்தீர்; அதை விட்டுக் கீழே குதித்ததும் குள்ளமாய்ப் போய்விட்டீரே, போய்விட்டீரே, போய் விட்டீரே!" என்று ஏலதாரரை வாயெல்லாம் பல்லாய் வினவ, 'சரியான இளிச்சவாயன் கிடைத்திருக்கிறான் இன்றைக்கு; இந்த நாற்காலியை இவன் தலையில்தான் கட்ட வேண்டும்' என்று அவராகப்பட்டவர் தீர்மானித்து, "உம்முடைய பெயர் என்னய்யா?" என்று அக்கணமே கேட்டுத் தெரிந்து கொண்டு, "கேளுமய்யா, சந்திரவர்ணரே! இந்த ஒர் அற்புதம் மட்டும் அல்ல; இன்னம் பல அற்புதங்கள் படு அழகான இந்த நாற்காலியிலே உண்டு.

சுருக்கமாகச் சொல்லப் போனால் தேவேந்திரனிடமிருந்து பரிசாகப் பெற்ற விக்கிரமாதித்தனின் சிம்மாசனம் கூட இதனிடம் ஒன்றும் செய்ய முடியாது. அதில் முப்பத்திரண்டு பதுமைகள் மட்டுமே இருந்தன. இதிலோ முப்பத்திரண்டாயிரம் 'இரவுக் கன்னிகள்' ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். நீர் இந்த அரியாசனத்தில் அமர்ந்தால் போதும்; அவர்கள் அத்தனை பேரும் வெளிப்பட்டு, 'நறுக், நறுக்’ கென்று உம்மை ஆசையுடன் கிள்ளி, உம்முடன் விரக தாபத்துடன் விளையாடி மகிழ்வார்கள். அந்த விளையாட்டிலே நீர் திடீரெனத் துள்ளலாம்; திடீர் திடீரென நெளியலாம்; திடீர் திடீர் திடீரென நெட்டுயிர்க்கலாம்.

இப்படியாகத்தானே ஒரு கணம்கூட உம்மை உட்கார விடாமல், உறங்க விடாமல் எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டிருப்பதில் அந்த 'இரவுக் கன்னி'களுக்கு ஈடு இந்த ஈரேழு பதினாலு உலகங்களிலும் கிடையாது" என்று எற்கெனவே எண்ணிப் பார்த்து வைத்திருந்தவர் போல் சொல்லி, "அப்பேர்ப்பட்ட நாலு கால் உள்ள நாற்காலியைக் கேவலம் இரண்டே கால்கள் உள்ள நீர் முப்பது ரூபாய்க்குத்தானா கேட்பது கேளும், தாராளமாகக் கேளும்-நாற்பது ரூபா, ஐம்பது ரூபா, அறுபது ரூபா-அதிர்ஷ்டக்காரர் ஐயா, நீர் சீக்கிரமாகவே நீர் ஏதாவதொரு சினிமா நட்சத்திரத்தின்