பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

உள்ளே கிணற்றில் குதித்துவிட்டு, அவள் வெளியே போய் எப்படி வீட்டைப் பூட்ட முடியும்?’ என்று தோன்ற, 'அட, சீ! என்ன மூளை, நம் மூளை!' என்று என் மூளையை நானே ‘மெச்சிக்' கொண்டு அவள் சொந்தக்காரர் வீடுகளுக்கெல்லாம் சென்று ஜாடைமாடையாக விசாரித்துப் பார்த்தேன்; ‘வரவில்லை' என்று சொன்னார்கள். கடைசியாக எதற்கும் உங்களைப் பார்த்துவிட்டு, போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யலாம் என்று இங்கே வந்தேன். என் மனைவியை மட்டுமல்ல; மானத்தையும் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று வந்தவர் சொல்ல, ஒரு கணம் யோசித்த விக்கிரமாதித்தர், மறுகணம் 'கவலைப்படாதீர்கள்!’ என்று சொல்லிக்கொண்டே காரிலிருந்து அன்றைய தினசரிப் பத்திரிகையை எடுத்து ஒரு புரட்டு புரட்டிப் பார்க்க, ‘என்ன பார்க்கிறீர்கள்?’ என்று வந்தவர் கேட்க, 'அதை இப்போது சொல்ல மாட்டேன்!' என்று சொல்லிக் கொண்டே அவர் தம் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, ‘ஏறுங்கள், காரில்!' என்று வந்தவரைக் காரில் ஏற்றிக் கொண்டு, 'முதலில் சித்ரா டாக்சீசுக்குப் போ!’ என்று பாதாளத்துக்குக் கட்டளையிடுவாராயினர்.

சொன்னது சொன்னபடி பாதாளம் காரைக் கொண்டு போய் சித்ரா டாக்சீசுக்கு முன்னால் நிறுத்த, 'இறங்குங்கள், இங்கே!' என்று விக்கிரமாதித்தர் வந்தவரை இறக்கி, 'அதோ, கொளுத்தும் வெயிலில் வியர்க்க விறுவிறுக்க நிற்கிறதே ஒரு கியூ-அந்தக் கியூவில் உங்கள் மனைவி தன் குழந்தையுடன் நிற்கிறாளா, பாருங்கள்!’ என்று சற்றுத் தூரத்தில் நின்ற கியூவைச் சுட்டிக் காட்ட, வந்தவர் ஓடிப் போய்ப் பார்த்துவிட்டு வந்து, 'இருக்கிறாள்; அந்தக் கியூவில்தான் இருக்கிறாள்!' என்று வாயெல்லாம் பல்லாகச் சொல்ல, ‘இப்போது சொல்கிறேன்-நான் பத்திரிகையில் பார்த்தது இன்று இங்கே என்ன புதிய சினிமாப் படம் வந்திருக்கிறதென்பது. அதில் இங்கே, இன்ன படம் என்பது