பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

283

வரலாம். இல்லை, தென் பக்கத்து ரோட்டிலிருந்து பிரியும் கிளை வழியாகவும் வரலாம். பெரிய புராணம் என்னும் கலைக்கோயிலை எழுப்பிய சேக்கிழார், அங்கு தோரணத் திருவாயில், திருமாளிகைத் திருவாயில், திரு அணுக்கன் திருவாயில் என்ற மூன்று வாயில்களையும் ஒருமுற்ற வெளியையுமே காட்டித் தருகிறார்.

அந்தச் சொற் கோயிலுக்கு ஏற்ற கற்கோயிலாக இக்கோயிலைக் கட்டி யிருக்கிறான் திரிபுவன வீரதேவன். முன் வாசல் கோபுரம் தோரணத் திருவாயில் ஏழடுக்கு மாடங்களோடு கூடியது. இரண்டாம் கோபுரம் திருமாளிகைத் திருவாயில் மூன்று அடுக்கு நிலங்களுடையது. இந்த இரண்டு வாயில்களையும் கடந்துதான் கோயிலுக்குள் செல்ல வேணும். இனிக் கோயில் பிராகாரத்தை வலம் வரலாம். விரிந்து பரந்த பிராகாரம் அது. நன்றாகத் தளம் போட்டு மிகவும் சுத்தமாக வைக்கப்பட்டிருக்கும். ஏதாவது பெரிய சமய மகாநாடு அல்லது இலக்கியக் கூட்டம் நடத்த வேண்டுமென்றால் அழகாக நடத்தலாம்.

ஐயாயிரம் பேர்கள் உட்கார்ந்து அமைதியாகக் கேட்கலாம். அவ்வளவு விசாலமானது. இந்தக் கோயிலின் விமானம் சிறப்பு உடையது. தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் போல் உயரத்திலோ அல்லது காத்திரத்திலோ பெரியது அல்ல. என்றாலும் கண்கவரும் அழகு வாய்ந்தது. சச்சிதானந்த விமானம் என்றல்லவா பெயர் அந்த விமானத்துக்கு! ஆதலால் பார்ப்பவர் உள்ளத்துக்கு ஓர் அமைதி, ஆனந்தம் எல்லாம் அளிக்காதிருக்காது அந்த விமானம். விமானத்தை நல்ல வர்ணம் பூசி மேலும் அழகு செய்திருக்கிறார்கள். அதன் நிர்வாகஸ்தரான தருமபுரம் ஆதீனத்தார். விமான தரிசனம் செய்து கொண்டே மேலப் பிராகாரத்துக்கு வந்துவிட்டால் அங்கு கருவறையின் பின்சுவரில், மேற்கே பார்த்த கோஷ்டத்தில் லிங்கோத்பவர்