பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

வேங்கடம் முதல் குமரி வரை

அவனுக்கு ஆனந்தம் அளித்து அவனைக் கலைஞனாகச் செய்கிறாளே பெண், அந்தப் பெண்ணின் முகம், கண், வாய், கை, வயிறு, கால் எல்லாவற்றுக்கும் உவமை தேடித் திரிந்த கலைஞன் அத்தனைக்கும் தாமரையைத் தானே கண்டுத் பிடித்திருக்கிறான். இதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் தணிகைப் புராணம் பாடிய கச்சியப்ப முனிவர். மலர்களுக்கு எல்லாம் அரசியாகத் தாமரை ஏன் விளங்குகிறது என்பதற்குக் காரணமும் அவர் கூறுகிறார்.

திருமுகம் கமலம், இணைவிழி கமலம்,
செய்யவாய் கமலம், நித்திலம் தாழ்
வருமுலை கமலம், மணிக்கரம் கமலம்,
மலர்ந்த பொன் உந்தியும் கமலம்,
பெருகிய அல்குல் மணித்தடம் கமலம்,
பிடி நடைத்தாள்களும் கமலம்,
உரு அவட்கு அவ்வாறு ஆதலின் அன்றே
உயர்ந்தது பூவினுட் கமலம்.

என்பதுதானே அவர் பாட்டு. இப்படி மலர்களில் எல்லாம் உயர்ந்தது தாமரை என்பதையும், அந்தத்தாமரையை ஒத்ததே இணைவிழிகள் என்பதையும் அந்தத் திருமால் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் எத்தனையோ யுகங்களுக்கு முன்பே. திருமாலுக்குச் சலந்தரனைச் சம்ஹரிக்கச் சக்கரம் வேண்டியிருந்திருக்கிறது. அதைப் பெறச் சிவனிடம் வருகிறார். ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு அருச்சித்தால் எண்ணியது கிட்டும் என்று அறிகிறார். அப்படியே ஆயிரம் தாமரை மலர்கள் சேர்த்து அருச்சனை பண்ண ஆரம்பிக்கிறார். ஒன்று, இரண்டு, மூன்று என்று கணக்கிட்டுக் கொண்டே தான் அருச்சனை நடக்கிறது. 999 மலர் அருச்சனை முடிந்து விடுகிறது. ஆனால் அதற்குமேல் மலர் இல்லை, அவைகளை வைத்திருந்த தாலத்தில், அருச்சனை குறைவுபடக்கூடாதே என நினைக்கிறார். அதற்காக