பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

267

வருகைக்காக அல்லவா காத்திருக்கிறான்! கலயர் வருகிறார், இறைவன் சடைமுடிக்கும், தம் கழுத்துக்கும் கயிறு கட்டி இழுக்கிறார். இறைவனும் நிமிர்கிறான். கட்டியிழுத்த கயிற்றின் வலியினாலா நிமிர்கிறான். அன்பெனும் பாசக்கயிற்றின் வலியினால் அல்லவா நிமிர்கிறான்.

தலை தாழ்த்திய தலைவன் நிமிர்வதற்குக் காரணமாயிருந்தவர் கலயர். இப்படித் தாழ்த்தியும் நிமிர்த்தியும் நின்ற காரணத்தால் இறைவன் ஆட்டம் கொடுக்கிறான். அதற்கென அளவெடுத்துப் புதிய ஆவுடையார் ஒன்றைச் செய்து கொண்டு வருகிறார். கலயர் தம் பணி சிறக்கவில்லையே என்று வருந்துகிறார்; வாடி நைகிறார்; அழுதுதொழுகிறார். இறைவனும் இரங்கித்தன்

குங்கிலியக்கலயர் குடும்பம்

உருவை எக்கிக் கொண்டு கலயர் அமைத்த ஆவுடையாரில் பொருந்தி நிற்கிறார். (இந்தச் செஞ்சடையப்பர் நல்ல யோகாசனப் பயிற்சி பெற்றவர் போலும்! சர்வாங்க ஆசனம், நௌலி, உட்டியாணா எல்லாம் போடத் தெரிந்திருக்கிறார். தலையைச் சாய்க்கிறார், உடலை வளைக்கிறார், தலையை நிமிர்க்கிறார், வயிற்றை எக்குகிறார்,