பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113

12

திருப்புன்கூர் சிவலோகன்

தீண்டாமை ஒழிப்பு, ஹரிஜன ஆலயப் பிரவேசம் எல்லாம், நம் சமூகத்தில் உள்ள குறைகளை நீக்க எழுந்த சமீப கால முயற்சிகள். 'எல்லோரும் ஓர் குலம். எல்லோரும் ஓரினம்' என்ற அடிப்படையில் சமுதாய வாழ்வில் எல்லோரும் பங்கு பெறவேணும் என்பதற்காக எழுந்த இயக்கம் அவை. நாடு சுதந்திரம் பெற்று மக்கள் சுபிட்சமாக வாழ, சமுதாயத்தில் உள்ள உயர்வு தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்ற பிரசாரம் தீவிரமாக நடந்தது; நடக்கிறது. இந்த இயக்கத்துக்கு முழு ஆக்கம் தந்தவர் மகாத்மா காந்திஜி.

எந்தக் கோயிலில் ஓர் இனத்தவரைத் தீண்டத்தகாதவர் என ஒதுக்கி உள்ளே விட மறுக்கிறார்களோ, அந்தக் கோயிலினுள் நுழைய காந்திஜி மறுத்திருக்கிறார். தமிழ் நாட்டிலே மீனாக்ஷி சந்நிதியிலே, அரங்கத்து அரவணையான் கோயிலிலே, பழனி ஆண்டவன் முன்பெல்லாம், ஹரிஜனங்களை அழைத்துக் கொண்டு காந்திஜி சென்று ஹரிஜன ஆலயப் பிரவேசத்தை விழாக்களாகவே நடத்தியது எல்லாம் சரித்திரப் பிரசித்தம். இன்று தமிழ் நாட்டில் ஹரிஜனங்களுக்குத் திறந்து விடப்படாத கோயில்களே இல்லை என்று எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால் இந்த இயக்கத்தை எண்ணற்ற வருஷங்களுக்கு முன்னாலேயே முன்னின்று

வே.மு.கு.வ-8