பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

வேங்கடம் முதல் குமரி வரை

சாய்க்காடு வேலவர்

தாங்கியிருப்பதுடன் ஒரு நீண்ட வேலையும் அணைத்தவனாகத் தானே நிற்கிறான். ஆனால் இவன் தன் இடது கையில் ஒரு வில்லையும் தாங்கி யிருக்கிறானே! இவன் என்று வில்லை ஏந்தினான்? என்று ஐயுறுவோம் நாம். வில்லை ஏந்தியவன் ராமன். வேல் எடுத்தவன் முருகன். இந்த இருவரையும் இணைத்து வில் லேந்திய வேலன் ஒருவனை உருவாக்குவதன் மூலமாக சைவ வைணவ வேற்றுமைகளையே தகர்த்து எறிய முடியாதா? என்று எண்ணியிருக்கிறான் ஒரு கலைஞன். வடித்திருக்கிறான் ஒரு திருவுருவத்தை. அந்த வில்லேந்திய வேலனது திருக்கோலத்தை இந்தச் சாய்க்காட்டில் கொண்டு வந்து நிறுத்தியும் இருக்கிறான். நல்ல மூன்று அடி உயரம், தலையிலே நீண்டுயர்ந்த கிரீடம், கழுத்திலே அணிகொள் முத்தாரம் தோளிலே புரளும் வாகுவலயம், காலிலே கழல் என்றெல்லாம் அமைத்ததோடு, வில்லையும் சேர்த்துத் தாங்க இடையினை வளைத்துத் தலையினைச் சாய்த்து நிற்கும் நிலை எல்லாம் கலை உரைக்கும் கற்பனையையும் கடந்து நிற்கிறது. இந்த வில்லேந்திய வேலன் ஆதியில் திருச்செந்தூரில் இருந்தவன் என்றும், பின்னர் காவிரிப்