பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

வேங்கடம் முதல் குமரி வரை

அவர் பெருமானுக்கு அணிவிக்கும் மாலைகளையெல்லாம் அன்றைக்கன்று இரவிலேயே அவளிடம் சேர்த்து விடுவார். அப்படி இருக்கும் போது ஒருநாள் அகாலத்தில் அந்த நாட்டு அரசன் சேவைக்கு எழுந்தருள, அர்ச்சகர் தாசியிடம் கொடுத்திருந்த மாலைகளைத் திரும்பப் பெற்றுப் பெருமானுக்கு அணிவித்திருக்கிறார். அந்த மாலையைப் பின்னர் அரசனிடம் கொடுக்க அதில் ஒரு மயிர் இருப்பது கண்டு அரசன் காரணம் வினவ, பெருமானுக்கே சவுரி(குடுமி) உண்டு என்று சாதிக்கிறார் அர்ச்சகர். அர்ச்சகரைக் காப்பாற்ற சௌரிராஜன் தன் தலையில் சவுரியைத் தாங்கி இருக்கிறான். அன்று முதல் இந்தக் கதையையே கொஞ்சம் மாற்றிக் குடுமியான் மலையிலும் சொல்கிறார்கள். பக்திக்கு விளக்கம் கொடுக்க மக்கள் செய்யும் கற்பனை என்று மட்டுந்தான் இக்கதைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். மூலவராம் நீலமேகன் துணைவியர் இருவர் என்றால், இந்தச் சௌரிராஜப் பெருமானுக்கு மனைவியர் நால்வர். பூதேவி, சீதேவி, ஆண்டாள் என்னும் மூன்று பேர் தவிர, பத்மினி என்ற நான்காவது பெண்ணையும் மணந்து கொண்டு பக்கத்துக்கு இருவராக நிறுத்தி நமக்குச் சேவை சாதிக்கிறான். ஆண்டாள் கதை நமக்குத் தெரியும். பத்மினியை மணந்த கதையையுமே கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே.

உபரிசரவசு என்று ஒரு மன்னன் வலையர் குலத்திலே. வேட்டைக்கு வந்த இடத்தில் தினைக் கதிர்களைக் கொய்கின்றான் கிருஷ்ணாரண்யத்தில். தினைக் தொல்லையைக் காத்து நின்ற இளைஞன் தடுக்கிறான். இருவருக்கும் போர் நடக்கிறது. பின்னர் தினைப்புனங்காத்த கண்ணன் தன் திரு உருக்காட்டி மன்னனை ஆட்கொள்கிறான். மன்னனும் கண்ணனுக்குக் கோயில் கட்டி, கோயிலைச் சுற்றி வள நகரம் அமைக்கிறான். இம்மன்னன் மகளாகவே பிராட்டி பிறக்கிறாள். பத்மினி என்ற பெயரோடு வளர்கிறாள். அவளது விருப்பப்படி, கண்ணபுரத்துச் சௌரி