பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வேங்கடம் முதல் குமரி வரை

அறியத் தோன்றும், ஸ்தல விருஷம் பாதிரியானதால் பாதிப் பெயருக்கு விளக்கம் பெறுவோம். அதிலும் உமையம்மை ஏதோ தவறு செய்ய அதற்குப் பிராயச்சித்தமாக அம்மையை இவ்வுலகில் பிறக்கும்படி இறைவன் சபிக்க, அந்தச் சாப விமோசனம் பெற அம்மை சப்த கன்னிகைகளுடன் கெடில நதிக்கரையில் உள்ள இப்பாதிரி வனத்துக்கு (பாடலவனம் என்றும் சொல்வார்கள்) வந்து தவம் புரிய, இறைவன் பாதிரி மரத்தடியிலே ஜோதி மயமாகத் தோன்றி ஆட்கொண்டார், என்று தல வரலாறு கூறும். அதற்கேற்பவே, அன்னை பெரியநாயகி அருந்தவநாயகி என்றே அழைக்கப்படுகிறாள். பாதிரியோடு புலியூர் சேருவானேன் என்றால் புலிக்கால் முனிவர் (வியாக்கிர பாதர்) பூசித்துப் பேறு பெற்றதால் என்று விளக்கம் பெறுவோம்.

இந்தத் தலத்துக்கும், முயலுக்கும் ஏதோ மிக்க நெருங்கிய தொடர்பு இருந்திருக்க வேணும். அதற்குக் கதைகள் இரண்டு உண்டு. ஒன்று வியாக்கிரபாதர் மகன் உபமன்யு பூஜை செய்யும்போது அவரது பாதம் அம்மை எழுந்தருளியுள்ள பீடத்தில் பேரில் பட்டிருக்கிறது. அருந்தவ நாயகியே அவள் என்றாலும் இதைப் பொறுத்துக் கொள்வாளா? உபமன்யு முனிவரை முயல் வடிவு எய்துக என்று சபிக்கிறாள். ஆனால் அந்த முயலோ அங்குள்ள பாதிரி மரத்தின் கிளை மீது பட்டதால் முயல் உரு நீங்கிப் பழைய உபமன்யுவாகவே ஆகிவிடுகிறது. சரிதான், மனைவி சாபம் கொடுக்க, அதற்கு நிவர்த்தியைக் கணவன் அருளி விடுகிறார். இவர்களது தாம்பத்திய உறவு எப்படி நன்றாக இருத்தல் கூடும் என்றே எண்ணத் தோன்றுகிறது நமக்கு. இரண்டாவது முயல் கதை வேறே. மங்கணர் என்று ஒரு முனிவர், அவர் இறைவன் பூசனைக்கு மலர் பறிக்கிறார். காலில் முள் தைக்கிறது. முள் தைத்த இடத்திலிருந்து ரத்தம் ஒழுகாது நன்னீர் பெருகுகிறது. இதைக் கண்டு ஆனந்தத்தால் துள்ளிக் குதிக்கிறார். இப்படிக் குதித்தவரது கால்கள்