பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

வேங்கடம் முதல் குமரி வரை

ராஜராஜனே இக்கோயிலில் உள்ள பெரிய நடராஜனையும் உருவாக்கி இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது எனக்கு. அவனைத் தவிர இவ்வளவு பெரிய அளவில் உருவம் அமைக்கவேண்டும் என்று வேறு யாருக்குத் தோன்றப் போகிறது? இங்குள்ள திருக்கோலங்களைக் கண்டு வணங்கி மேலும் இரண்டு மைல் தெற்கு நோக்கி நடந்தால் திருவீழிமிழலை வந்து சேர்வோம். வழி கொஞ்சம் நீளமானதுதான் என்றாலும் அதற்குத்தான் தக்க பலன் கிடைத்து விட்டதே. கோனேரிராஜபுரம் நடராஜரைத் தரிசிக்கும் வாய்ப்பு எளிதில் கிடைக்கக் கூடியதா என்ன?

கோனேரி ராஜபுரத்து உமாமகேசுவரர் சந்நிதிமேற்கு நோக்கி இருந்தால், இந்த வீழிமிழலை நேத்திர அர்ப்பண ஈசுவரர் சந்நிதி கிழக்கு நோக்கியிருக்கும். (நேத்திரத்தை அர்ப்பணம் பண்ணியவர் திருமால், ஆனால் நேத்திர அர்ப்பண ஈசுவரர் என்ற பெயர் இத்தலத்தில் உள்ள இறைவனுக்கு நிலைத்திருக்கிறது. அர்ப்பணம் பண்ணியவருக்குப் பெயர், புகழ் ஒன்றும் காணோம். அர்ப்பணம் ஏற்றுக்கொண்டவருக்கே புகழ், பிரபலம் எல்லாம். உலக இயல்பே அப்படித்தானே இருக்கிறது) இங்கும் கோயில் முன் ஒரு குளம் உண்டு. விஷ்ணு தீர்த்தம் என்று பெயர். குளத்தில் இறங்கி, நடந்த அலுப்புத்தீரக் கால், கை சுத்திசெய்து கொண்டு கோயிலுள் நுழையலாம். இத்தலத்தின் பிரதான வாயிலில் உள்ள ராஜ கோபுரத்தைவிட, கர்ப்பக்கிருஹத்தின் மேல் இருக்கும் விமானமே சிறப்பானது. அதற்கு விண்ணிழிவிமானம் என்றே பெயர். சக்கரம் பெற்ற திருமால் பெரியதொரு விமானத்தையே வைகுண்டத்திலிருந்து கொண்டுவந்து இக்கோயிலை அலங்கரித்திருக்கிறார் என்பர்.

தன்தவம் பெரிய சலந்தரன்
உடலம் தடிந்த சக்கரம்
எனக்கு அருள், என்று