பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

185

20

அம்பர் மாகாளத்தான்

ஷ்ய நாட்டிலே ஒரு சிறு கிராமம். அங்கு மார்ட்டின் என்று தோல் வேலை செய்பவன் ஒருவன். வயது முதிர்ந்த கிழவன் அவன். மனைவி மக்களை எல்லாம் இழந்து தளர்ந்தவன் என்றாலும், இறை அருளிலே நல்ல அழுத்தமான பக்தி உடையவன். தன்னைத் தேடி வருபவர்களுக்கு எல்லாம் உண்டி, உடை, உறைவிடம் எல்லாம் கொடுத்து ஆதரிக்கத்தவறாதவன். அவனுக்கு ஓர் ஆசை, தன்னைப் படைத்துக் காக்கும் இறைவனை நேரில் காணவேண்டுமென்று. தான் வணங்கும் இறைவனிடம் பல தடவை இந்தப் பிரார்த்தனையைச் செய்து கொள்கிறான். ஒரு நாள் இரவில் கனவில் இறைவன், “மார்ட்டின்! மார்ட்டின்! நாளை உன்னைக் காணவருகிறேன்' என்கிறார். மார்ட்டினுக்கோ ஒரே மகிழ்ச்சி, வரும் இறைவனை வரவேற்கத்தக்க முஸ்தீபுகளோடு இருக்கிறான். பகல் பொழுது கழிகிறது; இரவிலுமே பத்து மணி வரை ஆகிவிடுகிறது. இறைவன் வரக்காணோம். உள்ளம் தளர்கிறது. இறைவன் நம்மை ஏமாற்றி விட்டாரே என்று நினைக்கிறான். இப்படி இவன் குறைபட்டுக் கொண்டிருந்த பொழுது ஒரு அசரீரி கேட்கிறது. 'மார்ட்டின் உன் விருப்பம் பூர்த்தியாயிற்றல்லவா?' என்று. 'என்ன சுவாமி? சொல்லியபடி வராமல் என்னை ஏமாற்றிவிட்டு, இப்படிக்