பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

வேங்கடம் முதல் குமரி வரை

சுற்றியே கோயில் உருவாகியிருக்கிறது. பின்பு) வழிபாட்டுக்குரிய மலர்களை, வண்டு சுவைக்கு முன்பே எடுத்துப் பூஜிக்க நினைக்கிறார். அதற்காகப் பொழுது புலராமுன் மரங்களில் வழுக்காமல் ஏறப் புலிக் கால்களையும், இருட்டிலும் நன்றாகக் கண் தெரியப் புலிக் கண்களையும் இறைவனை வேண்டிப் பெறுகிறார். இப்படி இந்த வியாக்கிரபாதர் வாழும் நாளில் பதஞ்சலி முனிவரும் வந்து சேருகிறார் தில்லைக்கு. அன்று அந்த வான் அரங்கிலே நடராஜன் ஆடிய ஆட்டத்தைப் பற்றி பதஞ்சலியிடம் சொல்கிறார். இருவரும் சேர்ந்தே தவங்கிடக்கிறார்கள் இறைவனை நோக்கி, அவர்களுக்கு அந்த அற்புத நடனத்தைக் காட்ட. இதே சமயத்தில், இத் தில்லை வனத்தின் அதிதேவதையான தில்லைக்காளி, நடனத்தில் தன்னை ஒப்பாரும், மிக்காரும் இல்லை எனத் தருக்கித் திரிகிறாள். தில்லைக் காளியின் செருக்கு அடக்கவும், முனிவர்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்யவும், இறைவன் பூவுலகுக்கு இறங்கி வருகிறார். தில்லைக் காளியுடன் போட்டியிட்டு நடனம் ஆடுகிறார். அவளுமே சளைக்காமல் ஆடுகிறாள். கடைசியில் தில்லைக் காளி ஆட முடியாத அந்த

தில்லை சிற்பங்கள்