பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

வேங்கடம் முதல் குமரி வரை

பொன்னியின் நடுவதன்னுள்
பூம்புனல் பெழிந்து தேன்றும்
துன்னிய துருத்தியானைத்
தொண்டனேன் கண்டவாறே.

என்பது அப்பர் தேவாரம். சம்பந்தரும் அப்பரும் சும்மா தல யாத்திரையில்தான் இங்குவந்திருக்கிறார்கள். சுந்தரரோ, சங்கிலிக்குக் கொடுத்த சத்தியம் தவறி அதனால் கண்ணிழந்து, உடல் நலிந்து வந்திருக்கிறார். இழந்த கண்களைக் கச்சியிலும், திருவாரூரிலும் பெற்றிருக்கிறார். ஆனால் இத்துருத்தி வந்து இங்குள்ள பதும தீர்த்தத்தில் முழுகி எழுந்தே உடற்பிணி தீர்ந்திருக்கிறார்.

சொன்னவாறு அறிவார் துருத்தியார், :வேள்விக்குடியுளார் அடிகளைச்
செடியனேன் நாயேன்
என்னை நான் மறக்குமாறு?
எம்பெருமானை என்னுடம்படும்
பிணியிடர் கெடுத்தானை!

என்றே பாடியிருக்கிறார். இந்தக் கோயிலில் உள்ள சிற்பங்கள் எல்லாம் இன்றையக் கொத்தர்களால் செய்த வையே. பழைய செப்புப் படிமங்கள் அதிகம் இல்லை. இருப்பவைகளில் மிக்க அழகு வாய்ந்தது கண்டீசரது வடிவமே.

இக்கோவிலில் மணக்கோலநாதர் வடிவைத் தேடினேன். கிடைக்கவில்லை. அவர்தான் உத்தால மரத்தடியிலேயே பாதரக்ஷையைக் கழற்றிவிட்டு அந்தர்த்தியானம் ஆகியிருக்கிறாரே, அத்துடன் இன்னொரு செய்தியுங்கூட. இத்தலத்தில் மணக்கோலநாதர் பகல் நேரத்தில் மாத்திரமே இருப்பாராம். இரவு நேரத்தில் பக்கத்தில் உள்ள வேள்விக் குடிக்குச் சென்று விடுவாராம். இப்படிப் பகலில் ஓரிடத்தும், இரவில் ஓர் இடத்தும் தங்குவதற்குக் காரணமும்