பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

10

சீகாழித் தோணியப்பர்

று ஏழு வருஷங்களுக்கு முன் நான் தஞ்சையில் உத்தியோகம் ஏற்றிருந்தேன். அப்போது அமெரிக்க நண்பர் ஒருவர் தம் மனைவியுடன் தஞ்சை வந்திருந்தார். அவருக்குக் கோயில், குளம், சிற்பம், கலை முதலியவற்றைக் காண்பதில் மிகுந்த அக்கறை. (ஏதோ நம் நாட்டு உற்சவங்களில் நடக்கும் கேளிக்கைகளைப் படம் பிடித்து இந்தியர்களின் அநாகரிக வாழ்க்கை என்று அமெரிக்கப் பத்திரிகைகளுக்குக் கட்டுரை எழுதும் கூட்டத்தைச் சேர்ந்தவர் அல்ல அவர்) உண்மையிலேயே அவருக்கு நமது கோயில் கட்டிட நிர்மாணத்தில், சிற்பக் கலையில் எல்லாம் நல்ல ஈடுபாடு. அவரைத் தஞ்சை ஜில்லாவில் உள்ள சில பெரிய கோயில்களுக்கு அழைத்துச் சென்று காட்டினேன். அந்தச் சுற்றுப் பிரயாணத்தில் ஓர் இரவு மாயூரத்தில் வந்து தங்கினோம் நாங்கள். அவருக்கு நம் கோயிலில் நடக்கும் உற்சவம் ஒன்றையும் காண வேண்டும் என்று அவா. மாயூரத்தில் விசாரித்தால், மறுநாட் காலை சீகாழியில் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறுகிறது என்றார்கள். எனக்குமே அந்த உற்சவத்தைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ஆதலால் நானும் நண்பரும் அவரது மனைவியும் அதிகாலையில் எழுந்து ஸ்நானத்தை யெல்லாம் முடித்துக்கொண்டு சீகாழி சென்றடைந்தோம். அங்குள்ள சட்டைநாதர் ஆலயத்தின் ஆஸ்தான