பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

251

27

கங்கை கொண்ட சோழீச்சுரர்

சோழவள நாட்டிலே கொள்ளிடத்திலிருந்து பிரியும் மண்ணியாற்றின் கரையிலே சேய்ஞலூர் என்று ஒரு சிற்றூர், சேயாம் குமரக் கடவுள் தாம் விரும்பி உறைவதற்கு நல்லஊர் என்று தேர்ந்து எடுக்கப்பட்ட தலம் அது. சேய் நல் ஊர்தான் சேய்ஞலூர் என்று பின்னால் பெயர் பெற்றிருக்கிறது. குமரனாம் சேயை மாத்திரம் அல்ல, இன்னுமொரு மகனையுமே இறைவன் பெற்றிருக்கிறான் இத்தலத்திலே. அந்தக் கதை இதுதான்: எச்சத்தன் என்ற அந்தணனுக்கு விசாரருமன் பிறக்கிறான்; வளர்கிறான். பசுக்களை மேய்ப்பது அந்தணரது தொழில் அல்ல என்றாலும் விசாரருமனுக்குப் பசுநிரைகளை மேய்ப்பதிலே, அவற்றைப் பரிபாலிப்பதிலே அலாதிப் பிரியம். பசுக்களும் விசாரருமனிடம் மிக்க அன்போடு பழகுகின்றன. விசாரருமன் ஆற்றங்கரையிலே மணலால் சிவலிங்கம் ஒன்று அமைத்துப் பூசை செய்கிறான். பசுக்களோ அச்சிவலிங்க வழிபாட்டுக்குத் துணை செய்ய, தாமாகவே பால் சொரிகின்றன. சிவபூசையும் நாளுக்கு நாள் ஓங்கி வளர்கின்றது. யாரோ ஒருவன் இத்தனை விபரத்தையும் எச்சத்தனிடம் கூறுகின்றான். உண்மை அறிய எச்சத்தன் வருகிறான்; நடப்பதை அறிகிறான். பூசை நடக்கும்