தமிழகம்
15
சிறந்த நகரங்கள் முதலியன
சங்ககாலத்தில் சேரநாட்டுத் தலைநகரம் மேற்குக் கடற் கரையில் இருந்த வஞ்சிமாநகரம் என்பது; முசிறி என்பது துறைமுக நகரம், கொங்கு நாடு சேரர்க்கு உட்பட்டபோது கொங்குக் கரூர் சேரர் தலைநகரங்களுள் ஒன்றாக இருந்தது. சேரநாட்டு ஆறுகளுள் மிகச்சிறந்தது பெரியாறு என்பது.
சோழநாட்டில் சங்ககாலத்தில் உறையூர் தலைநகராய் இருந்தது; சங்க இறுதிக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் தலை நகராயும் துறைமுக நகரமாயும் இருந்தது. பல்லவர் காலத்தில் கும்பகோணத்தை அடுத்த பழையாறை என்பதே தலை நகராய் இருந்தது; பின்பு சிறிது காலம் தஞ்சாவூர் கோநகராய் விளங்கியது. கி.பி. 11, 12, 13-ஆம் நூற்றாண்டுகளில் கங்கைகொண்ட சோழபுரம் கோநகராய் விளங் கியது. சோழப் பேரரசர்க்குக் காஞ்சிபுரமும் ஒரு தலைநகராய் விளங்கியது. சோளுட்டு ஆறுகளுள் தலைசிறந்தது காவிரி யாகும், காவிரியாறே சோழநாட்டு மக்களுக்குச் செவிலித்தாய்.
பாண்டியநாட்டின் தலை நகரம் மதுரை; புகழ்பெற்ற துறைமுக நகரம் கொற்கை என்பது. கி. பி. 13- ஆம் நூற் ருண்டில் (பழைய) காயல் துறைமுக நகரமாயிருந்தது. தொண்டி யும் ஒரு துறைமுக நகரம். பிற்காலத்தில் தூதுக்குடி, (துரத்துக்குடி), காயல்பட்டினம் என்பன துறைமுக நகரங்களாய் விளங்கின. சங்ககாலத்தில் பொதுசா (இன்றைய புதுச்சேரியை அடுத்த கடற்கரைப் பகுதி), சோபட்டினம் (மரக்காணம்), மாமல்லபுரம் என்பன சோழநாட்டிற்கு வடக்கே துறைமுகப்பட்டினங் களாயிருந்தன. பல்லவர் காலத்தில் மயிலாப்பூர், மாமல்ல புரம் என்பன சிறந்த துறைமுக நகரங்களாய் விளங்கின. பல்லவர் காலத்திலும் பிற்காலச் சோழர் காலத்திலும் காகப்பட்டினம் சிறந்த துறைமுக நகரமாய் விளங்கியது.